Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 31 July 2014

பி.எஸ்.சி. நர்சிங்: 2-ஆம் வாரத்தில் கலந்தாய்வு

பி.எஸ்.சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பி.எஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஓடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த
ஜூலை  7-ஆம் தேதி முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன. சுமார் 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து தேர்வுக்குழு அதிகாரிகள் கூறியது:
பி.எஸ்.சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments: