Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 26 July 2014

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: விடைத்தாள் நகல் இணையதளத்தில் பதிவேற்றம்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு விடைத்தாள் நகல் கோரியவர்கள் சனிக்கிழமை (ஜூலை 26) காலை 10 மணி முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மாணவர்கள்  student.hse14rtv.in என்ற இணையதளத்தில் தங்களது பதிவு எண், விண்ணப்ப எண் ஆகியவற்றைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள் நகலைப் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து இரண்டு நகல்கள் எடுத்து ஜூலை 30 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

No comments: