Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 17 June 2014

UGC: கல்வி விண்ணப்பங்களில் தாயின் பெயரையும் சேர்க்க உத்தரவு

பாலின சமன்பாட்டை நிலைநிறுத்த, இனிமேல், அனைத்து கல்வி ஆதார சான்றுகளிலும், தாயின் பெயரையும் சேர்த்துக்கொள்ள, அனைத்து பல்கலைகளுக்கும் யு.ஜி.சி. உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது: பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளால் வழங்கப்படும் அனைத்து விண்ணப்பங்கள், படிவங்கள், பட்ட சான்றிதழ்கள் ஆகியவற்றில், ஒரு மாணவரின் தாயின் பெயரையும் சேர்க்க வேண்டும் என்று உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் யு.ஜி.சி.,யின் அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
இந்த புதிய முடிவு, விவாகரத்து பெறப்பட்ட அல்லது பிரிந்து வாழும் தம்பதியினரின் பிள்ளைகளுக்கு மிகவும் பயன் தருவதோடு, பல்வேறான சட்ட சிக்கல்களையும் எதிர்கொள்ள உதவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டே, இதுபோன்ற ஒரு உத்தரவை UGC வழங்கியும், அந்த உத்தரவு கண்டிப்புடன் பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: