விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் 10,12-வது முடித்து நிகழாண்டில் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளிடம் இருந்து உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திட்ட இயக்குநர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்த மாவட்டத்தில் இண்டஸ், ஐ.எல்.ஓ மற்றும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, முறைசார் பள்ளிகளில் 10,12-வது படித்து மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து உயர் கல்வியான தொழில்நுட்பக் கல்லூரி, தொழில் பயிற்சி நிலையம், நர்சிங், கேட்டரிங், ஐ.டி.ஐ, இளங்கலை பட்டம், பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்புகளில் சேர்ந்து பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
அதேபோல், 2014-15ம் ஆண்டிற்கான உதவித் தொகை கோரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். அப்போது, தாங்கள் படித்த சிறப்பு பள்ளியின் பெயர், படித்த ஆண்டு, உயர் கல்வி குறித்த விவரம், படிக்கும் கல்வி நிறுவனத்தின் பெயர், முகவரி மற்றும் 10,12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்கள் மற்றும் இரண்டு புகைப்படங்களுடன் ஜூலை 30ம்-ம் தேதிக்குள் திட்ட இயக்குநர், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், ஆட்சியர் வளாகம், விருதுநகர்-626002 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அனுப்பி வைக்கலாம். மேலும், இது தொடர்பாக அலுவலக தொலைபேசி எண்-04562-252040ல் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment