தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூன் 14) காலை 11 மணிக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மொத்தம் 27,907 மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிடுகிறார்.
சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் வழக்கமாக தரவரிசைப் பட்டியல் ஒட்டப்படும். இந்த ஆண்டு அதுபோன்று ஓட்டப்பட மாட்டாது என்றும் இணையதளம் மூலம் மாணவர்களும் பெற்றோரும் தரவரிசையை அறிந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூன் 17-ஆம் தேதி முதல் கலந்தாய்வு: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு வரும் 17-ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment