
புதுச்சேரி ஒதுக்கீட்டிற்கான பொதுப்பிரிவில் மாணவர் விஜய்கிருஷ்ணன் முதலிடம் பெற்றார். கடந்த 8-ஆம் தேதி நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் 376 மையங்களில் நடத்தப்பட்ட தேர்வை 58 ஆயிரத்து 103 மாணவர்கள் எழுதினர். நுழைவுத்தேர்வுக்கான தரவரிசைப்பட்டியல் வரும் ஜூன் 17-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து ஜூலை 17-ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகிறது என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கல்வி நிறுவனமான புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில், 150 காலியிடங்கள் உள்ளன.
No comments:
Post a Comment