Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 28 June 2014

மதுரை பல்கலை.யில் பி.எட். படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் நீட்டிப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பி.எட். பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்கக இயக்குநர் ஜே. பாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, தேசிய கல்விக் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை கல்வியியல் பட்டப் படிப்புக்கான் (பி.எட்) விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 2 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவத்துடன், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 18ஆம் தேதி வரை, பல்கலை நகர், மாணவர் சேர்க்கை மையம் மற்றும் நகர் வளாகம், அழகர்கோவில் சாலை, மதுரை-2 ஆகிய இடங்களில் வழங்கப்படும்.
மேலும் விண்ணப்பங்களை www.mkudde.org என்ற பல்கலைக்கழக இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு, பல்கலை நகர் மையத்தை 0452-2456807 என்ற எண்ணிலும், நகர் வளாகத்தை 0452-2535973 என்ற எண்ணிலு ம்,
www.mkudde.org என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம், எனத் தெரிவித்துள்ளார்.

No comments: