Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 17 June 2014

சென்னைப் பல்கலை: தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை துவக்கம்

சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி முறையில் 2014-15-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை (ஜூன் 16) தொடங்கியது.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத்தை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன் தொடங்கி வைத்தார்.
இது குறித்து தொலைதூரக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னைப் பல்கலைக்கழக, தொலைதூரக் கல்வி நிறுவன ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை பிரிவு மையத்தில் அக்டோபர் 31-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். இது தவிர, தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள சென்னைப் பல்கலைக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட சேர்க்கை மையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
கல்வித்தகுதி மற்றும் கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரி w‌w‌w.‌u‌n‌o‌m.ac.‌i‌n​ மற்றும் w‌w‌w.‌i‌d‌e‌u‌n‌o‌m.‌i‌n​ ல் தெரிந்து கொள்ளலாம்.

No comments: