புதிய அரசு ரஞ்சித் குமாரை சொலிசிட்டர் ஜெனரலாக நியமித்தது. 6 புதிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களும் நியமிக்கப்பட்டனர்.
புதிய அட்டர்னி ஜெனரல்
இந்த நிலையில் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி நேற்று நியமிக்கப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டது. இவர் நாட்டின் 14–வது அட்டர்னி ஜெனரல் ஆவார்.
முகுல் ரோகத்கி, டெல்லி ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி அவாத் பிகாரி ரோகத்கியின் மகன் ஆவார்.
முக்கிய வழக்குகளில் ஆஜரானவர்
முகுல் ரோகத்கி, மும்பையில் சட்டம் படித்தவர். படித்து முடித்தவுடன் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வாலிடம் இளநிலை வக்கீலாக பணியாற்றினார். பின்னர் சுப்ரீம் கோர்ட்டு வக்கீலாக உயர்ந்தார்.
இவர் குஜராத்தில் கடந்த 2002–ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்புச்சம்பவத்தைத் தொடர்ந்து நேரிட்ட இனக்கலவரங்கள் தொடர்பான வழக்கிலும், போலி என்கவுன்ட்டர் வழக்குகளிலும் சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் அரசின் சார்பில் ஆஜராகி வாதாடினார். அம்பானி சகோதரர்கள் இடையே எரிவாயு பகிர்வில் பிரச்சினை ஏற்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்தபோது அனில் அம்பானிக்காக ஆஜராகி வாதிட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக ஆஜராகி உள்ளார்.
புதிய அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கியின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.
No comments:
Post a Comment