
இந்த 5 பேரில் 4 மாணவர்கள் மருத்துவ தரவரிசைப் பட்டியலிலும் முதல் நான்கு இடங்களைப் பிடித்தவர்கள்.
சென்னை கோபாலபுரம் டிஏவி மேல்நிலைப் பள்ளி மாணவர் கே. சுந்தர் நடேஷ் பிளஸ்-2 தேர்வில் 1167 மதிப்பெண் பெற்றவர். மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய இரு தரவரிசைப் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளார். மருத்துவப் படிப்பில் சேரப் போவதாக அவர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். அபிஷேக் பிளஸ்-2 தேர்வில் 1171 மதிப்பெண் பெற்றவர். இரு தரவரிசைப் பட்டியலிலும் 2-ஆம் இடம் பிடித்த இவரும் மருத்துவ படிப்பில் சேரப் போகிறார்.
ஈரோடு பாரதிய வித்யா பவன் பள்ளி மாணவர் வி.எஸ். விஜய ராம் பிளஸ்-2-வில் 1178 மதிப்பெண் பெற்றவர். இரண்டு தரவரிசைப் பட்டியலிலும் 3-ஆம் பிடித்து இவரும் மருத்துவத்தில் சேரப்போகிறார்.
இதுபோல் நாமக்கலைச் சேர்ந்த எம். மிதுன் இரண்டு தரவரிசைப் பட்டியலிலும் 4-ஆம் பிடித்துள்ளார். இவரும் மருத்துவத்தில் சேருவதே தனது லட்சியம் என தெரிவித்தார்.
பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 9-ம் இடம் பிடித்துள்ள ஈரோடு அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஆர். மைதிலி மருத்துவ தரவரிசைப் பட்டியலில் 7-ஆவது இடம் பிடித்துள்ளார். இவரும் மருத்துவப் படிப்பில் சேரப் போகிறார்.
முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள மற்ற மாணவ, மாணவிகளான நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியைச் சேர்ந்த ஆர்.பி. ஹரீதா - 1175 (5-வது ரேங்க்), திருப்பூரைச் சேர்ந்த எம். பிரபு - 1181 (6-வது ரேங்க்), கோவையைச் சேர்ந்த எஸ். ரவி சங்கர் - 1186 (7-வது ரேங்க்), ஈரோட்டைச் சேர்ந்த என். விஷ்னுபிரியா - 1193 (8-வது ரேங்க்), வேலூரைச் சேர்ந்த எஸ். ராமு - 1183 (10-வது ரேங்க்) ஆகிய 5 பேரும் பிளஸ்-2-வில் உயிரியலுக்குப் பதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை மேற்கொண்டவர்கள்.
இவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர உள்ளனர்.
இந்த முதல் 10 மாணவர்களில் எம். பிரபு, கே.ஆர். மைதிலி, எஸ். ராமு ஆகிய மூவரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள்.
தொழில் பிரிவு: பிளஸ்-2 தொழில் பிரிவின் கீழ் படித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சேலத்தைச் சேர்ந்த கே. ஆனந்த் முதலிடத்தையும், கோவையைச் சேர்ந்த ஜே. மெல்பா இரண்டாம் இடத்தையும், கோவையைச் சேர்ந்த ஆர்.ஜே. சங்கர் பிரபு மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இதுபோல் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment