Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 9 May 2014

TN: 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - முதலிடம், இரண்டாம் இடம் & மூன்றாம் இடம்.

12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 1193 மதிப்பெண் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மாணவி சுஷாந்தி மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
1192 மதிப்பெண் பெற்று தருமபுரி மாணவி அலமேலு மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
1191 மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு நித்யா, நாமக்கல் துளசி ராஜன் ஆகிய 2 மாணவர்கள் மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துக்கொள்ள, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையத்திலும், மாவட்ட மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்களின் பள்ளிகளிலும் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை 12 ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது.
பொதுத்தேர்வை மொத்தம் 8 லட்சத்து 26 ஆயிரத்து 117 பேர் எழுதினர். 3 லட்சத்து 80 ஆயிரத்து 288 மாணவர்களும், 4 லட்சத்து 45 ஆயிரத்து 829 மாணவிகளும் தேர்வு எழுதினர். ‌
பள்ளி மாணவர்களைத் தவிர 53 ஆயிரத்து 629 தனித் தேர்வர்கள் இந்த பொதுத் தேர்வில் பங்கேற்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 242 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 45 ஆயிரத்து 771.
இந்த ஆண்டு, சம்பந்தப்பட்ட மாணவரின் புகைப்படம், பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட முகப்புச்சீட்டு விடைத்தாளுடன் இணைத்தே வழங்கப்பட்டது.

No comments: