Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, 9 April 2014

TRB-TET: மே 21ல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெறும். இதற்கான ஹால் டிக்கெட்டு விண்ணப்பதார்களுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.
பி.எட். முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும், ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையிலும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்வு தேதி மே 21-ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரிலும் இத்தேர்வு நடக்கிறது.
இத் தேர்வுக்கு 4, 600க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு என்பதால் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாள் தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்பதோடு, தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண் சலுகையும் வழங்கப்படுகிறது. இதனால் இந்த தேர்வில் 82 மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: