அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனுமதிச் சீட்டில் குறைகள் இருந்தால் அதை சரி செய்ய ஏப்ரல் 20-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படுகின்றன.
இந்த 15 சதவீத இடம் அகில இந்திய நுழைவுத் தேர்வு தகுதியின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இத்தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வருகிறது.
2014-15 கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்வு அனுமதிச் சீட்டு www.aipmt.nic.in இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் பெறப்படவில்லை என்ற தகவல் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்வர் ஏப்ரல் 12-ம் தேதிக்குள் சி.பி.எஸ்.இ. அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
பதிவிறக்கம் செய்த அனுமதிச் சீட்டில் சிறு குறைகள் இருந்தால் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் சி.பி.எஸ்.இ. அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. முகவரி: உதவிச் செயலர் (தேர்வுகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சி.பி.எஸ்.இ. தலைமையகம், சமூகக் கூடம், சிக்ஷா கேந்திர பிரீத் விஹார், தில்லி - 110092. தொலைபேசி எண்: 011 - 22019683.
No comments:
Post a Comment