Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 1 April 2014

வித்தியாசமான முதுநிலைப் படிப்புகள்!

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ராஜீவ் காந்தி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் யூத் டெவலப்மெண்ட் கல்வி நிறுவனத்தில் வித்தியாசமான முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
த்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ்காந்தி நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் யூத் டெவலப்மெண்ட் என்கிற கல்வி நிறுவனம் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வருகிறது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் (Youth Empowerment), உள்ளூர் நிர்வாகம் (Local Governance ), வாழ்க்கைத் திறன் கல்வி (Life Skills Education), பாலினக் கல்வி (Gender Studies), மேம்பாட்டுப் பயிற்சி (Development Practice), தொழில் ஆலோசனை (Career Counseling) ஆகிய பாடபிரிவுகளில் இங்கு முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்கலாம். இங்கு தங்கிப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு விடுதி வசதியும் உண்டு.

செமஸ்டர் முறையில் நடத்தப்படும் இப்படிப்புகளுக்கு முதல் செமஸ்டர் கட்டணம் ரூ.7,800. அதையடுத்த மற்ற செமஸ்டர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் செலுத்த வேண்டியதிருக்கும்.  தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு படிப்புக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. படிப்பில்  சேர்ந்த பின்பு ஒவ்வொரு செமஸ்டரின்போதும், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.6,000 உதவித்தொகையும் வழங்கப்படும்.
இக்கல்வி நிறுவனத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர விரும்புவோர், இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலைப் பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் இந்தப் பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்குத் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரிலும், மற்ற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களிலும் இந்த நுழைவுத்தேர்வு நடைபெறும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வில் ஆங்கிலத்தில் கேள்விகள் இருக்கும். அப்ஜெக்டிவ் மற்றும் டிஸ்கிரிப்டிவ் வகையில் இந்தத் தேர்வு இருக்கும். கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழியியல், கலாசாரம், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், நாட்டு நடப்பு போன்றவை குறித்த 80 பொது அறிவுக் கேள்விகள், அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும். இதற்கு 80 மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்தப் பகுதியில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. இளைஞர்கள் பற்றியும், நடப்பு நிகழ்வுகளைப்  பற்றியும் விரிவாக பதில் எழுதக் கூடிய கேள்விகளுக்கு 20 மதிப்பெண்கள் வழங்கப்படும். நுழைவுத்  தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
இப்படிப்புகளில் சேர விரும்புபவர்கள் நேரடியாகவும், தபால் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் விண்ணப்பத்தைப் பெற விரும்புபவர்கள் தங்களுக்குரிய விண்ணப்பக் கட்டணத்திற்கான வரைவோலை எடுத்து, விண்ணப்பக் கேட்புக் கடிதத்துடன் இணைத்து, அதனுடன் சுயமுகவரியிட்ட, ரூ.25 தபால்தலை ஒட்டிய கவரையும் இணைத்து, அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, கையொப்பமிட்டு, நுழைவுத்தேர்வுக் கட்டணத்திற்கான வரைவோலை, தேவைப்படும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.200. மாற்றுத் திறனாளிகள்,  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100. தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கிக் கிளைகளின் மூலம், ஸ்ரீபெரும்புதூரில்  மாற்றத்தக்க வகையில், ‘The Director, Rajiv Gandhi National Institute of Youth Development’ என்கிற பெயருக்கு வங்கி வரைவோலை மூலம் இவ்விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
Rajiv Gandhi National Institute of Youth Development, (Institute of National Importance),
Ministry of Youth Affairs & Sports, Govt. Of India, Sriperumbudur - 602 105.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04-04-2014
நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி: 27-04-2014.
நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 16-05-2014

விவரங்களுக்கு: <www.rgniyd.gov.in
தகவல்களுக்கு: 99402 90848, 94455 46759

No comments: