மாணவர்களுக்கான கோடைகால ஆங்கிலப் பயிற்சியை சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கில மொழி மையம் வழங்குகிறது.
இதுகுறித்து பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப் பதாவது:
இளம் மாணவர்களுக்கான கோடைகால ஆங்கிலப் பயிற்சி 5-வது முறையாக ஏப்ரல் 28-ம் தேதி தொடங்கி மே 16 வரை நடத்தப்படுகிறது. 8-10 வயது, 11-12 வயது, 13-15 வயது ஆகிய பிரிவுகளில் மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர். திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சிகள் நடக்கும். ஒவ்வொரு பிரிவுக்கும் 2 மணி நேரம் ஒதுக்கப்படும். பயிற்சி நேரத்தை மாணவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஒரு பயிற்சிக் குழுவில் 18 முதல் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
சென்னை அண்ணாசாலை இலக்கம் எண் 737-ல் உள்ள பிரிட்டிஷ் கவுன் சில் அலுவலகத்தில் இதற்கான பதிவு, முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
‘உலகைச் சுற்றி 15 நாட்கள்’
இப்பயிற்சிக்கான இந்த ஆண்டின் மையப் பொருள் ‘உலகைச் சுற்றி 15 நாட்கள்’ என்பதாகும். அதன்படி, இப்பயிற்சியில் பங்கேற்போர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டைப் பற்றி ஆராய்வார்கள். இளம் மாணவர்களின் படைப்பாற்றலை பெற்றோர் தெரிந்துகொள்ளும் வகையில் பயிற்சி இறுதி நாளில் அவர்கள் நேரில் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள்.
பிரிட்டிஷ் கவுன்சிலின் சிறப்பு கோடைகால வகுப்புகள், பேச்சு, எழுத்து, கவனித்தல், வாசித்தல், இலக்கணம், சொல்வளம் ஆகிய திறன்களை குழந்தைகளிடையே வளர்க்க உதவுகின்றன. அவை நம்பிக்கை, குழு விவாதத் திறன் ஆகியவற்றை வளர்க்கவும், அவர்களது வலிமை மற்றும் குறைபாடுகளை அறிந்துகொண்டு எதிர்காலத்தில் எவ்வாறு மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதை உணர வைக்கவும் உதவு கின்றன.
இப்பயிற்சியின் இறுதியில் பிரிட்டிஷ் கவுன்சில் சான்றிதழ் வழங்கும்.
மேலும் விபரங்களுக்கு 1800 102 4353 என்ற தொலைபேசி எண் அல்லது pooja.parasuraman@britishcouncil.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment