Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 1 April 2014

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சிப் படிப்பு

புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அதனை சார்ந்த மையங்களின் கீழ் நடைபெறும் வேளாண் துறையின் பல்வேறு பிரிவுகளில் பி.எச்டி படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி:குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் அல்லது முதுகலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் சிறப்பு பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
இந்த வருடம் முதுகலை பட்டப் படிப்பு முடிக்க இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். நுழைவுத்தேர்வு ஜூன் 8ம் தேதி நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.iari.rest.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தபின் கிடைக்கப்பெறும் ஆன்லைன் படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்ப வேண்டும். முழுவிபரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைனின் விண்ணப்பிக்க ஏப்ரல் 9 கடைசி நாளாகும். ஆன்லைன் படிவம் சென்று சேர கடைசி நாள் ஏப்ரல் 16.

No comments: