ஹார்மிஸ் நினைவு அறக்கட்டளை 100 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது.
கேரளா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலத்தில் இருந்து தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து உதவித்தொகை வழ்ங்கப்படுகிறது.
2013-14 கல்வியாண்டில், பேடரல் வங்கியின் நிறுவனர் கே.பி.ஹார்மிஸ் நினைவாகபொது அறக்கட்டளையின் சார்ப்பில் ஆண்டு தோறும் இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
அந்த வகையில், இந்தாண்டு மெரிட் முறையில் மருத்துவம், பொறியியல், விவசாயம், நர்சிங் மற்றும் மேலாண்மை படிப்பு படிக்கும் மாணவர்களை தேர்வு செய்து உதவித்தொகை வழங்குப்படுகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் 20 பேரை தேர்வு செய்து ஹார்மிஸ் உதவித்தொகை வழங்கப்படும். சிறப்பு பிரிவினருக்கும் உதவித்தொகை உண்டு.
வங்கி இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உதவித்தொகை குறித்த விரிவான தகவல்களுக்கு www.federalbank.co.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
No comments:
Post a Comment