Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 30 April 2014

8ம் வகுப்பு தனித் தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மே 1ம் தேதி அன்று பன்னிரெண்டரை வயது பூர்த்தி அடைந்தவர்கள், தனித் தேர்வர்களாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினால், ஆன்லைன் மூலம் மே 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்களை தேர்வுத்துறை அமைத்துள்ள மண்டல மையங்களுக்கு நேரில் சென்று தேர்வுத் துறை இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். ஆனால், ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ. 50 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் போது மாற்றுச் சான்று நகல், பதிவுத் தாள் நகல், பிறப்பு சான்று நகல், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து அனுப்ப வேண்டும். ரூ.40க்கு தபால் தலை ஒட்டிய உறையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப் படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 8ம் வகுப்பு தேர்வுக்கான அனைத்து விவர மும் தேர்வுத்துறை இணைய தளத்தில் காணலாம்.

No comments: