B.Ed. முடித்த மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான அரசாணையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக மட்டுமே இந்தத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம் என அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் மார்ச் 5 முதல் 25-ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகின்றன. இரண்டாம் தாளுக்காக மட்டுமே சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment