டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) ஆகிய பதவிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி சிறப்பு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் பணியில் சேர்ந்து விலகிய மற்றும் நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்ப 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவு எண்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத் தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன.
அவர்கள் எழுத்துத் தேர்வு மதிப் பெண், தொழில்நுட்ப கல்வித்தகுதி, காலிப்பணியிடம் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந் தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு ஏப்ரல் 1-ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடக்கும். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் தேர்வர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அழைப்பு அனுப்பப் பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களது அனைத்து மூலச் சான்றிதழ்கள் மற் றும் சான்றொப்பமிடப்பட்ட நகல் சான்றிதழ்கள், 2 போட்டோ ஆகிய வற்றை கலந்தாய்வுக்கு வரும் போது தவறாமல் கொண்டுவர வேண்டும்.
மேலும் இது மாற்றுத் திறனாளி களுக்கான கலந்தாய்வு என்பதால் உரிய மருத்துவரிடமிருந்து பெறப் பட்ட சான்றிதழில் ஊனத்தின் தன்மை, ஊனத்தின் விழுக்காடு மற்றும் பணிகளை திறம்பட செய் வதற்கு ஊனம் தடையாக இருக் காது என்ற சான்றையும் அவசியம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ஏற் கெனவே விண்ணப்பத்துடன் இச் சான்று இணைக்கப்பட்டிருந்தால் தற்போது அது தேவையில்லை. கலந்தாய்வுக்கு வரத் தவறினால், மறுவாய்ப்பு அளிக்கப்படாது. இவ் வாறு விஜயகுமார் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment