Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 29 March 2014

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு

"உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த மாதம் 23ம் தேதியில் இருந்து ஜூன் 1ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்" என பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.
உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த மாதம், 16 வரை பொதுத் தேர்வுகள் நடக்கின்றன. அதன் பின், 4 நாள் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இயங்கும். பின், 23ல் இருந்து ஜூன் 1 வரை கோடை விடுமுறை.

ஜூன் 1ல் பள்ளி திறப்பு நாள் என்றாலும், அன்று, ஞாயிற்றுக்கிழமையாக உள்ளது. எனவே, ஜூன் 2ல், அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும். பிளஸ் 1 வகுப்பு மட்டும் ஜூன் 16ம் தேதி திறக்கப்படும். இவ்வாறு, ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை பொறுத்தவரை, ஏப்ரல் 30 வரை பள்ளி வேலை நாட்களாகும். எனவே, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே 1 முதல் ஜூன் 1ம் தேதி வரை விடுமுறை.
இதற்கிடையே அடுத்த மாதம் 24ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தல் காரணமாக, ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல், 23, 24, 25 ஆகிய, மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.

No comments: