கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்காக பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் நெட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது.
தமிழ், ஆங்கிலம், இந்தி, உள்ளிட்ட மொழிப்பாடங்கள், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட கலைத்துறை பாடப்பிரிவுகளுக்கான தேர்வில் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதினர். தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னையில் 12 மையங்களில் 14 ஆயிரத்து 382 பேர் எழுதினர். கோவையில் 9 மையங்களில் 9 ஆயிரத்து 858 பேரும், திருச்சியில் 10 மையங்களில் 11 ஆயிரத்து 122 பேரும் தேர்வெழுதினர். இதேபோல், மதுரையிலும் 16 மையங்களில் பத்தாயிரத்து 300 பேர் நெட் தேர்வை எழுதினர்.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்காக இன்று நடத்தப்பட்ட ''நெட்'' தேர்வினை, உயர்நீதிமன்ற அனுமதியுடன் பிரெய்லி முறையில் சென்னையை சேர்ந்த பட்டதாரி ஒருவர் எழுதியிருக்கிறார். இத்தேர்வை எழுதியதின் மூலம் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியிருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment