ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உயர்கல்வி அமைப்புகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தி உள்ளார்.
பல்கலைகழக மானியக் குழுவின் 75-வது ஆண்டு நிறைவு விழா டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மன்மோன்சிங்,உயர்கல்வி அமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். பல்கலைகழங்களின் ஆராய்ச்சிகளை தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.ஆசிரியர் பற்றாக்குறை பிரச்னைகளை களைய உயர் கல்வி அமைப்புகள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment