உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
தமிழ் நீங்கலாக மற்ற அனைத்து பாடங்களுக்கான தேர்வு முடிவு அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்பட்டு தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கில், தமிழ் பாட தேர்வு முடிவை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், வழக்கு தொடர்ந்த மனுதாரர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கி 2 இடங்களை ஒதுக்கி வைக்குமாறும் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவு விவரம் திங்கள்கிழமை (16-ம் தேதி) கிடைக்கும் பட்சத்தில் வெள்ளிக்கிழமைக்குள் முடிவை வெளியிட்டுவிடுவோம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment