அனைத்துக் கல்லூரிகளிலும் கையெழுத்து இயக்கம் நடத்துவதற்கு, அகில இந்திய மாணவர் கழகம், இந்திய மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழகப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைகளுக்காக அகில இந்திய மாணவர் கழகம், இந்திய மாணவர் சங்கம் ஆகியன ஒருங்கிணைந்து போராட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்புக் குழு சார்பில், அனைத்துக் கல்லூரிகளிலும் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தால் வரும் திங்கள்கிழமை நடத்தப்பட உள்ள பேச்சுவார்த்தை பலன் தரவில்லையெனில், இப்போராட்டத்தை தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment