வானிலை அதிகாரி (கிரேடு 2) தேர்வு எழுதுவோருக்கு, அதற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
UPSC அமைப்பு, வானிலை ஆராய்ச்சித் துறையில் கிரேடு 2 நிலையில் பணியாற்றுவதற்கு, 58 வானிலை அதிகாரிகளைத் தேர்வு செய்யும் பொருட்டு, டிசம்பர் 29ம் தேதி போட்டித் தேர்வை நடத்துகிறது.
இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் www.upsc.gov.in என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுத விண்ணப்பித்தோர், தங்களின் பதிவு எண், விண்ணப்ப எண், வரிசை எண் அல்லது தங்கள் பெயர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டு, ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முற்றிலும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் இத்தேர்வு, காலை 10 மணிக்குத் தொடங்கி, மதியம் 12 மணிக்கு முடிவடையும். எனவே, காலை 8 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment