Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 9 November 2013

TRB தொடர்பாக எந்த சந்தேகமாக இருந்தாலும் நேரில் வரலாம். அல்லது 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடியாக பதில் அளிக்கிறார்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியம்

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் செய்கிறது. அதுமட்டுமல்ல அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்கிறது. மேலும் அரசு கலை கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்கிறது. இப்படியாக வருடம் முழுவதும் ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை நடத்தி வருகிறது.

இப்போது ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக விபுநய்யர் உள்ளார். உறுப்பினர் செயலாளராக தண்.வசுந்தராதேவியும்,உறுப்பினர்களாக க.அறிவொளியும்தங்கமாரியும் உள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் சிலர் மதிப்பெண் குறைவாக இருக்கிறது என்றும்சிலர் விடை சரியாக இல்லை என்றும் புகார் தெரிவித்தவண்ணம் தினமும் வருகிறார்கள்.

குறை தீர்க்கும் மையம்

அவ்வாறு வருபவர்களுக்கு சரியான முறையில் பதில் அளிப்பதற்காக தலைவர் விபுநய்யர் ஒரு குறைதீர்ப்பு மையத்தை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த மையம் ஆசிரியர் தேர்வு வாரிய நுழைவு வாயில் அருகே உள்ளது.

இதற்காக லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் திலகவதியும்கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செந்தில்வேலும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதில் ஆசிரியர் செந்தில்வேல் ஆசிரியர் தேர்வு வாரிய நுழைவு வாயிலில் இருக்கிறார். கோரிக்கை கொண்டுவருபவர்களிடம் மனுக்களை பெறுகிறார். ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த மார்க் உள்ளது என்று கூறினால் உடனே அவரை அருகே உள்ள குறை தீர்க்கும் மையத்திற்கு அழைத்துச்செல்கிறார்.

அங்கு ஆசிரியர் திலகவதி உடனடியாக கம்ப்யூட்டர் உதவியுடன் அந்த நபரின் விடைத்தாளை எடுத்து காண்பித்து பார்க்கவைக்கிறார்.

திருப்தி அடைகிறார்கள்

கடந்த 2 நாட்களாக இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இது தொடர்ந்து செயல்பட உள்ளது. கடந்த 2 நாட்களில் 13 பேர் மதிப்பெண் வித்தியாசம் என்று கோரி வந்தனர். அந்த நிமிடமே கோரிக்கை மனு கொண்டுவந்தவர்களை கம்ப்யூட்டர் முன் அமர்த்தி பதில் அளிக்கப்படுகிறது. குறைதீர்க்கும் மையத்தில் பார்த்த பின்னர் அவர்கள் திருப்தியுடன் செல்கிறார்கள்.

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள விடைகளில் சில தவறு உள்ளன என்று பலர் மனு கொடுத்துள்ளனர்.

செல்போனில் தெரிவிக்கலாம்

இந்த குறை உள்பட மொத்தம் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. சிலர் தொலைபேசியில் தங்களது குறைகளை தெரிவிக்கிறார்கள். அவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து பதில் அளிக்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்பாக எந்த சந்தேகமாக இருந்தாலும் நேரில் வரலாம். அல்லது 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments: