Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 9 November 2013

கல்வி உதவித்தொகை உயர்வு

தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, வரும் கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இனி இளநிலை பட்டப்படிப்பு மாணவருக்கு ர.500, முதுகலைப் பட்டப் படிப்பு மாணவருக்கு ரூ.600ம், பி.எச்டி. மாணவருக்கு ரூ.800ம் வழங்கப்பட உள்ளது.
பிஎச்டி மாணவர்களுக்கு ரூ.1500 மற்றவர்களுக்கு ரூ.500ம் உயர்த்தப்படுகிறது. அதே போல் இதுவரை 450 மாணவர்களுக்கு வழநங்கப்பட்ட உதவித்தொகை, இனி 500 பேருக்கு வழங்கப்படும். இந்த உதவித்தொகையை பெற மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாக இருக்க வேண்டும். மாணவர், 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும. மேலும், தற்போது முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இதற்கான விண்ணப்பத்தைப் பெற ரூ.10 அஞ்சல்தலை ஒட்டிய விலாசமிட்ட உறையை  கௌரவச் செயலாளர், தமுழ்நாடு கல்வி அறக்கட்டளை, ராணி சீதை மன்றம், 6வது தளம், எண் 603, அண்ணா சாலை, சென்னை-600006 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: