அறிவியல் சிந்தனையையும், ஆராயும் உணர்வையும் அறிவியல் கல்வி உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், இது உண்மையா ? நமது உள்ளுணர்வுகளும், உள்ளொளி நுண்ணறிவுகளும் அறிவியல் காரணங்களைக் காட்டிலும் நம்மிடம் பொதுவாக அதிகம் ஆதிக்கம் செலுத்தக் கூடியவைகளாகும். நமது உள்ளுணர்கள் கூர்ந்து நோக்குதலின் மூலமாக நுண்ணறிவுகளாக மாறும் தருணங்களின் போது தான், அறிவியல் கல்வி இந்த நோக்கத்தை அடைய முடியும்.
அறிவியலும், நுண்ணறிவும்
அறிவியல் - கூர்ந்து நோக்கும் திறன்கள் ஏன் முக்கியமாகும்?
முன்னுரை
ஒவ்வொரு குழந்தையும் உள்ளுணர்வு மூலமாகவே பலவகையான நிகழ்வுகளைப் பற்றிய தவறான கருத்துக்களை வளர்த்துக் கொள்கிறது. ஒரு குழந்தையிடம், ஒரு குறிப்பிட்ட நிகழ்வு எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பற்றிச் சொன்னால் மட்டும் அதைக் குறித்த கருத்தை அதற்கு விளக்கியதாக எடுத்துக் கொள்ள முடியாது. குழந்தைகளை அவர்களாகவே உற்று நோக்கியும், ஆராய்ந்தும் பார்ப்பதற்கு அனுமதிப்பதின் மூலம் அவர்களின் தவறான கருத்துக்களை வெளிப் படுத்தி, உடைத்து எறிவதும் அறிவியல் ஆசிரியரின் முக்கிய கடமையாகிறது.
அறிவியலும், நுண்ணறிவும்.
ஒரு அறிவியல் ஆசிரியரை எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் - 10 வருடங்களுக்கும் மேலாக நானும் அவர்களைப் போல ஒரு ஆசிரியனாக இருந்துள்ளேன் - மாணவர்களின் உள்ளுணர்வின் முழுமையையும் எதிர்கொள்வதாகும். ஒரு பக்கம், இந்த நிகழ்வை இந்த உள்ளுணர்வின் மூலம் அறியும் போது, உலகத்தைப் பற்றிய ஒரு ஒழுங்கான தொடர்புள்ள காட்சியை உருவாக்குவது என்பது ஒரு விழிப்புள்ள மனத்தின் அறிகுறியாகும். இன்னொரு பக்கம், டாவிட் மூடி என்பவர் தெரிவிதது போல், இத்தகைய உள்ளுணர்வுகளின் உருவாக்கங்கள் உலக அறிவியல் அறிதலுக்கு எதிராக இருக்கின்றன.
மேலும், இப்படிப்பட்ட தவறான கருத்துக்கள் அறிவியல் கல்வியையும் தாண்டி மிக மிக சக்தியுடன் வலம் வருவதை மிக எளிதில் கவனிக்க முடியும். எனது சொந்த அனுபவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இந்தக் கருத்தை நன்கு விளக்கும். ஒரு மாலை வேலையில், என் நண்பன் வீட்டில், சுமார் ஒரு டஜன் பேர்கள் சாதாரணமாகக் ஒன்று கூடி இருந்தோம். அங்கு கூடி இருந்த அனைவரும் பெரும் பட்டம் பெற்ற பட்டதாரிகள். அதில் இயற்பியல் அறிவியலில் பி.எச்.டி. பட்டம் பெற்ற இருவரும் இருந்தனர். என்னுடைய நண்பர் - எங்களை வரவழைத்தவர் - ஒரு கேள்வியைக் கேட்டார் - “ சந்திரன் எங்கு உதயமாகிறது ? “ இந்தக் கேள்வியைக் கேட்டவுன், அந்த இடத்தில், பலவிதமான பதில்களால், உண்மையிலே பீதி ஏற்பட்டது. சந்திரன் உதிப்பதே இல்லை என்ற பதிலும் துணிந்து சொல்லப்பட்டது. அந்தக் கூட்டத்தில் இருந்த இரண்டு பேர்கள் மட்டும் தான் உறுதியாகப் பதில் சொன்னார்கள் - அனைத்து விண்வெளிக் கோளங்கள் கிழக்கில் உதயமாவதான தோற்றம் ஏற்படுத்துகின்றன. உதிப்பது, மறைவது ஆகியவைகள் அனைத்தும் பூமியின் சுழற்சியால் உண்டாகும், மாயத் தோன்றங்களாகும்.
மாணவரின் மனத்தில் முன்பே இருக்கும் உள்ளுணர்வு கருத்துக்களின் தன்மையை உணர்ந்து கொள்ளாமல் அறிவியலை கற்பிக்க முனைந்தால், மனம் சிதறுண்டு போய், அவைகள் இரண்டும் இணையாமல், விஷயம் அப்படியே விடைதெரியாமல் நின்றுவிடும். தகுந்த நேரத்தில், உள்ளுணர்வு வெளிப்பாடுகள் மேலேழுந்து, பதில்களை ஆக்கிரமிக்கும். இது, ஒருவரின் கட்டுப்பாடான நிலை மற்றும் தத்துவ விளக்கம் ஆகிய இரண்டிற்கும் உள்ள உறவினைப் போல் காணப்படும். ஆத்மாவின் தன்மையையும், கே யின் உள்ளுணர்வு விளக்கமான - ஆத்மா சிந்தனைகளால் ஆனது - என்பதையும் ஒருவர் ஏற்றுக் கொண்டால், இந்த உள்ளுணர்வு என்பது எதிர்மறை உள்ளுணர்வாக உருவாகிறது. ஆத்மா எங்கும் நிறந்துள்ளதாகத் தெரிகிறது. அது தான் மையமாக இருந்து, ஒரு நபரை கட்டுப்படுத்துகிறது. இதற்கு ஒரே வழி, கூர்ந்து கவனிப்பது ஒன்றுதான். காரணத்தோடும், அறிவுபூர்வமாகவும் விவாதிப்பது ஒன்று தான் மிகச் சிறந்த மதிப்புள்ள கருத்துக்களைச் சுட்டிக் காட்டி, நிஜமான கவனிப்பின் மூலம் அது என்ன என்பதைப் பற்றிய ஆய்வுக்கு அவசியமானதாகிவிடும். எச்சரிக்கையாகவும் மற்றும் வெளிப்படையாகவும் செயல்படும் கவனிப்பால் மட்டுமே உள்ளுணர்வு உண்டாகும் என்று தெரிகிறது. கே யை அவரது பேச்சாலும், அறிவாற்றலாலும் புரிந்து கொள்ளுவது நம்மைச் சில சமயங்களில் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். அது ஒரு எல்லைக்குட்பட்ட வெளித் தோற்ற ஒழுங்கை ஏற்படுத்தலாம். மையக் கருத்தினை விளக்காமல் அது விட்டுவிடும்.
“ தி ஸ்கூல்” என்ற பெயருள்ள பள்ளியில், 5-ம் வகுப்பு அறிவியல் கலைத் திட்டத்தில், கடந்த சில வருடங்களாகவே, “உள்ளொளி நுண்ணறிவு“-வின் எதிர்மறையாகச் செயல்படும் உள்ளுணர்வைச் தொடர்ச்சியாகப் பயன்படுத்த முயன்றுள்ளனர். அதன் நோக்கம் இரண்டு வகைப்பட்டது. ஒன்று - ஒரு விளைவினால் உண்டாகும் உள்ளுணர்வின் பொதுவான தன்மைகள் மூலம் குழுவின் ஒட்டு மொத்த கருத்தை உருவாக்கல். இரண்டு - கணிக்கப்பட்ட ஆய்வுகள் மற்றும் கவனிப்புகள் மூலம், புதிய கோணத்தில் அந்த நிகழ்வுகளை ஒரு முழுமையாகக் காண உதவுதல்.
மிதவையைப் பற்றிய தவறான கருத்துக்களைக் குறிக்கும் சில உதாரணங்களை எடுத்துக் கொள்வோம்.
கனமான பொருட்கள் மூழ்கும். ஆகையால், ஒரு டன் எடையுள்ள பெரிய மரக்கட்டை மூழ்கும் என்று முடிவு செய்வது, அடர்த்தியைப் பற்றித் தெரியாத நிலையைக் காட்டுகிறது.
இரும்பு எப்பொழுதும் மூழ்கும். - இதுவும் ஒரு குறுகிய நிலையில் எப்போதும் நினைக்கும் தன்மைக்கு - அதாவது நீர் தான் எப்பொழுதும் பயன்படுத்தப்படும் என்று கருதும் நிலையைக் காட்டுகிறது. மேலும், மிதக்க விடும் பொருளின் அடர்த்தி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது என்பதையும் மறந்து விடுதலைக் குறிக்கிறது.
ஆசிரியரின் வழிகாட்டும் முதல் பணி ஒரு எளிய பரிசோதனையின் முடிவினை மாணவர்கள் அவர்கள் மனத்தளவில் உருவகிக்கும் படி சொல்லுவதாக இருக்க வேண்டும். இதன் மூலம், மாணவர்களின் உள் மனத்தில் இருக்கும் கருத்துக்களை வெளிக் கொணர முடியும்.
இந்தக் கருத்தை விளக்குவதற்கு, ஒரு கடிகார ஊசலியின் அலைவின் வீச்சையும், அதற்கான கால நேரத்திற்கும் உள்ள உறவினை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கடிகாரங்களிலிருந்து, விளையாட்டுத் திடலில் இருக்கும் ஊஞ்சல் வரை இந்த ஊசலியின் ஆட்ட்த்தைப் பற்றிய பரந்த அனுபவங்கள் குழந்தைகளுக்கு உண்டு. குழந்தைகளிலிடம் இந்தக் கேள்வியைக் கேட்கலாம் - “ ஒரு முழுமையான ஊசலியில் ஆட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம், அதன் வீச்சைப் பொருத்து வேறு படுமா ? “ இந்தக் கேள்வி உண்மையிலேயே, பொதுவான மொழியில் எந்தவிதமான கடினமான கலைச் சொற்கள் இன்றி கேட்கப்படவேண்டும். அநேகமாக அனைவரும் ஒட்டு மொத்தமாக, அந்தக் கேள்விக்கு ஆமாம் என்று தான் பதில் அளிப்பார்கள். மாணவர்கள் தங்கள் மனக் காட்சியில் தோன்றும் குழந்தைத் தனமான படத்தைப் பற்றி பலவிதமாக ஆராய ஆசிரியர் அவர்களுக்கு உதவி செய்யும் அதே வேளையில் அந்தக் கேள்விக்கான விடையினை அவர்கள் எந்த வழியின் மூலம் அடைந்தார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளாச் செய்ய வேண்டும். பொதுவாக, “ ஊசலின் வீச்சு அதிகமாக இருக்கும் போது, ஊசல் ஆட்டம் அதிகமான தூரம் செல்லும். ஆகையால், அது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் “ என்ற கருத்து மாணவர்களின் மனத்தில் இருக்கும். இருப்பினும் இந்த்த் தருணத்தில் அந்தக் கருத்தை மாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படமாட்டாது. இந்த வேளையில், பொது அறிவின் அடிப்படையில் காணும் காட்சியைப் பற்றி நன்கு தெளிவாக விவாதிக்க மாணவர்களுக்கு உதவி செய்யும் முயற்சியின் கால கட்டம் தான் இது. இந்த விளைவினைப் பற்றி பலவிதமான குழந்தைகள் ஒரு மிகப்பெரிய பொதுவான கருத்துக்களை அடைவது ஒரு பெரிய சாதனையாகும். இதைக் கண்ணுற்ற என் சக ஊழியர், அரிஸ்டாட்டிலின் உலகப் பார்வை போல் இக் குழந்தைகள் தாங்களாகவே கண்டுபிடிக்கும் திறமைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லும்படி அமைந்தது. இந்தக் காட்சிப் படம் மீண்டும் தீவிரமான கவனிப்பு பரிசீலனைக்கு உட்படுத்தப் படுகிறது. சில சமயங்களில், இது என்ன என்பதைப் பற்றிய விவாத்த்திலும், குழந்தைகள் மீண்டும் புதிதாக நினைத்துப் பார்க்க ஆரம்பிப்பார்கள். குழந்தைகள் இப்படிக் குறிப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன் - வீச்சு அதிகமாக இருப்பின், ஊசல் அதிகமான உயரத்திலிருந்து விடப்படும். ஆகையால், ஊசலின் வேகம் அதிகமாகும். இது அதிக தூரம் செல்வதை ஈடு செய்யும். இந்தக் கருத்து, மாணவர்கள் எந்தவிதமான ஆய்வோ, தீவிரமான கவனிப்போ செய்வதற்கு முன்பே, வெளிப்பட்ட ஒன்றாகும். இந்த நிகழ்வை ஒரு புதிய கோணத்தில் அதிலும் குறிப்பாக ஒரு புதிய களத்தில் பார்க்க குழந்தைகளை அழைத்துச் செல்ல உதவுவதே இந்த முழுப் பயிற்சியின் நோக்கமாகும்.
புதிய களம் - அதுவும் சிக்கலான ஒன்றாக இருக்க்க் கூடும். நிஜத்தின் புதிய காட்சியும் ஒரு படமாகத்தான் இருக்கிறது. ஆனால், அது திரும்பவும் சிந்திப்பதற்கு ஒரு அடித்தளமாகி விடுகிறது. இன்னொரு நூண்ணறி வுக்குகான கருப்பொருளாகிறது. இந்த அனைத்து வழிகளிலும் எந்தவிதமான மூலாதாரமான ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், நுண்ணறிவு அடிப்படைக் கல்வித் திட்டம் மனத்தை விரிவாக்கி, உலகம் ஆழமானது என்ற உண்மையை உணரச்செய்கிறது. அந்த ஆழத்தை தீவிரமான கவனிப்பினால் மட்டுமே அடைய முடியும்.
No comments:
Post a Comment