மாநில அளவில் திருப்பூரில் நடைபெறவுள்ள தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்க சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட அளவிலான தேசிய அறிவியல் மாநாடு கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இம்மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. க48 பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று அறிவியல் ஆய்வறிக்கைகளை சமர்பித்தனர். இம்மாநாட்டில் சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் எஸ்.சண்முகப்பிரியா, வி.நந்தினி, எஸ்.பி.சுபஸ்ரீ, எஸ்.பவித்ரா, டி.பிரியங்கா குழுவினர் சமர்பித்த சுருள்பாசி ஒர் உயிரி எரிபொருள் என்ற தலைப்பிலான அறிவியல் ஆய்வறிக்கை இரண்டாமிடம் பெற்று மாநில அளவிலான அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
தேர்வு பெற்ற மாணவியர்களையும், வழிகாட்டிய ஆசிரியர்களையும் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிச் செயலர் ரத்தின.பாலசுப்பிரமணியன், தொழிலதிபர்கள் ஆர்.ராமநாதன், ஆர்.திருநாவுக்கரசு, லைமை ஆசிரியர் ஆர்.ரவிசங்கர், உதவித் தலைமை ஆசிரியர் டி.சுவாமிநாதன் ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர்
No comments:
Post a Comment