Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 16 November 2013

சச்சினுக்கு பாரத ரத்னா விருது

கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும்  வேதியியல் விஞ்ஞானி  சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.
இந்த விருது பெறும் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாரத ரத்னா விருது குறித்த அறிவிப்பைக் கேட்டு தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த விருதை தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாகவும் கூறினார். மேலும், இந்தியா தான் தனது தாய் மண் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் யாருடனும் ஒப்பிடமுடியாதவை; அவரது அறிவுக்கும் திறமைக்கும் விளையாட்டு மீதுள்ள உணர்வுக்கும் அளிக்கப்படும் உயரிய விருது இது என்று கூறியுள்ளது. சச்சின் ஏற்கெனவே பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், இது அவருக்கு உயரிய கௌரவம் என்று கூறியுள்ளது பிரதமர் அலுவலகம்.
மிக இளம் வயதில் பாரத ரத்னா விருது பெறுகிறார் சச்சின் டெண்டுல்கர். மேலும், அவர் தனது கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற்று சில மணி நேரங்களில் அவருக்கு உயரிய இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த சில வருடங்களாக சச்சினுக்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது. ஆனால், தேர்தல் களை கட்டியுள்ள இந்த நேரத்தில், அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: