அரசு தேர்வுகள் எழுதும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிக அதிக மதிப்பெண் பெறும் வகையி்ல் ஊக்குவிப்பு சிற ப்பு பயிற்சி முகாம், கமுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் முதுகுளத்தூர் தாலுகாக்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ்-2 அரசு தேர்வுகள், மாணவ, மாணவிகளுக்கு மிக அதிக மதிப்பெண் பெற ஊக்குவிப்பு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த 2 வகுப்புகளிலும் மதிப்பெண் பெற்று வருவதில் முதல் இரண்டு இடம் வகிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, மேலும் மிக அதிக மதிப்பெண் பெறும் வகையில் ஊக்குவிப்பு பயிற்சி சிறப் பு முகாம்களில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த அடிப்படையில் கமுதி, முதுகுளத்தூர் தாலுகாக்களைச் சேர்ந்த 17 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 67 பேர் தேர்வு செய்யப்பட் டு, இவர்களுக்கு கமுதி-கோட்டைமேடு அரசு மேனிலைப்பள்ளி வளாகத்தில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு ஊக்குவிப் பு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் க.நந்த குமார் உத்தரவி்ல், மாவட்ட முதன்மை கல்வி அலு
வலர் சிவகாம சுந்தரி ஆலோசனையி்ல் இந்த முகாமிம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர்(பொறுப்பு) சேகர் வரவேற் றார். முகாமி்ல் பரமக்குடி கல்வி மாவட்ட அதிகாரி முத்து பழனியாண்டி, கமுதி போலீஸ் ஏ.எஸ்.பி. வி.விக்ரமன் ஆகி கியோர் சிறப்பு அழைப்ப்பாளர்களாக பங்கேற்று அதிக மதிப்பெண் பெறுவதற்கு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை கூ றினர்.
முகாமில் சிறந்த பாட ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டு அரசு தேர்வுகளில் மிக அதிக மதிப்பெண் பெற எப்படி, எப்படி படிக்க வேண்டும் என்றும், அரசு தேர்வை எந்த முறையி்ல் கவனத்துடன் எழுத வெண்டும் என்றும் விளக்கி சிறப்பு பயிற்சி அளித்தனர்.
No comments:
Post a Comment