இந்திய ராணுவத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள் சேருவதற்குத் தயார்படுத்துவதை முக்கிய நோக்கமாகக்கொண்டு 1961ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு சைனிக் பள்ளிகளை நடத்தி வருகிறது. இந்தியா முழுவதும் 24 சைனிக் பள்ளிகள் உள்ளன. மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும், தமிழக அரசும் இணைந்து நடத்தும் சைனிக் உண்டுறை பள்ளி திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் இயங்கி வருகிறது. மத்திய அரசின் பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கில வழிப் பள்ளி இது.
இதில் 2014 - 2015ஆம் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இப்பள்ளியில் மாணவர்கள் மட்டுமே சேர முடியும். மாணவர்களுடைய பெற்றோரின் மாத வருமானத்தின் அடிப்படையில் ஒரு மாணவருக்குத் தலா ரூ.50,000 வரை மாநில, மத்திய அரசுகளின் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
01.07.2014 அன்று 10 வயது முடிந்தும் 11 வயது முடியாமலும் (02.07.2003லிருந்து 01.07.2004 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்) இருக்கும் மாணவர்கள் மட்டுமே 6ஆம் வகுப்பில் சேர முடியும். 01.07.2014 அன்று 13 வயது முடிந்தும் 14 வயது முடியாமலும் ( 02.07.2000லிருந்து 01.07.2001தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்), அத்துடன், அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் 9ஆம் வகுப்பில் சேரத் தகுதி உண்டு.
இப்பள்ளியில் சேர விளக்கக் குறிப்பேடும் விண்ணப்பப் படிவமும் பெற, பொதுப் பிரிவு மற்றும் படைத்துறைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.650க்கும், தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.500க்கும் 'முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதி நகர்' என்ற பெயரில் வரைவோலை (DD) எடுத்துத் தபால் மூலம் அனுப்பிப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது http://www.sainikschoolamaravathinagar.edu.in என்ற சைனிக் பள்ளியின் இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, பதிவுக் கட்டணத்தைப் படிவத்துடன் சேர்த்து அனுப்பலாம். விண்ணப்பங்களைப் பெற கடைசி நாள் 30.11.2013. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் 07.12.2013. நுழைவுத் தேர்வு 05.01.2014 அன்று நடைபெறும்.
No comments:
Post a Comment