மாணாக்கர்களுக்கு கணினி வழியாக கல்வி கற்பித்து அவர்களின் புரிதல் திறனை மேம்படுத்தும் வகையில் ’ஸ்மார்ட் கிலாஸ் ரூம்’ (‘SMART CLASS ROOM’) என்ற புதிய தொழில்நுட்பத்தினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் இப்பள்ளிகளில் ஏற்கெனவே இருக்கும்
வகுப்பறைகளில் ஏதேனும் ஒரு வகுப்பறை (20’*20’) ’ஸ்மார்ட் கிலாஸ் ரூம்’ ஆக மாற்றியமைக்கப்படும் என்றும் இத்திட்டத்தின்படி கல்வி கற்பிக்க ஆர்வமுள்ள, இத்துறைப் பள்ளிகளில் ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியர்களில், ஒரு பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்கள் வீதம் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment