Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 21 October 2013

உலகளாவிய சிந்தனையும், உள்நாட்டு செயல்பாடும்


Resource Info

Basic Information

கடந்த பல வருடங்களாக நம்முடைய தினசரி வாழ்க்கையில் பிளாஸ்டிக்கின் உபயோகம்  அதிகரித்து வருவதால் சுற்றுப்புறச்சூழலுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் உபயோகத்தை உணர்வு பூர்வமாகக்  குறைப்பதற்கு அல்லது மறுசுழற்சி செய்வதற்கு நம்முடைய பழக்க வழக்கங்களை மறுசிந்தனை செய்ய இது நம்மை கட்டாயப்படுத்துகிறது.  “பிளாஸ்டிக் உபயோகிப்பதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும், சுற்றுப்புற சூழலுக்கு இதனால் ஏற்படும் மாசுபாடு குறித்தும் எப்படிக் குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்?” என்பது குறித்துச் சில உதாரணங்கள் மூலம் விளக்குவதுதான் இந்த பாடத்தின் திட்டம். 

Lesson plan Details

Duration: 
03 hours 00 mins
முன்னுரை: 

அறிமுகம்
உலகத்தில் உள்ள அனைத்து அரசாங்கங்களுக்கும் பிளாஸ்டிக் உபயோகிப்பதை நிர்வாகிப்பது அல்லது குறைப்பது என்பதுதான் மிகப் பெரிய அக்கறையாக உள்ளது. தினசரி வாழ்க்கையில் பிளாஸ்டிக் உபயோகம் பற்றி குழந்தைகளுக்கும் தெரியுமென்பதால், “மற்ற நாடுகள் இந்தப் பிரச்னையை எப்படி சமாளிக்கின்றன? ஒவ்வொரு குழந்தையும் அவர்கள் வீட்டிலிருந்து ஆரம்பித்து மேலும் இது குறித்து என்ன செய்ய முடியும்?” என்பது பற்றி ஆசிரியர் பேசலாம். 
Objective: 

நோக்கங்களும், குறிக்கோள்களும்
1. பிளாஸ்டிக் உபயோகிப்பதனால் ஏற்படும் அபாயம் குறித்து கற்றுக் கொள்வது
2. மாணவர்கள் சுற்றுப்புறம் பற்றி மிகவும் உணர்வுப்பூர்வமாக இருப்பது
3. மீண்டும் உபயோகிப்பது மற்றும் பிளாஸ்டிக் மறு சுழற்சி பற்றி மாணவர்கள் அக்கம்பக்கத்தில் பிரச்சாரம் செய்ய கற்றுக் கொள்வது

Steps: 

உலகளாவிய சிந்தனையும், உள்நாட்டு செயல்பாடும்:
முன்பு மார்க்கெட்டுக்குச் செல்லும் போது மக்கள் துணிப்பை அல்லது சணல்பைகளைத் தங்களுடன் எடுத்துச் செல்வார்கள். இன்றைக்கு நாம் கடையிலிருந்து திரும்பும் போது பிளாஸ்டிக் பையுடன் திரும்புகிறோம். அதிக பிளாஸ்டிக்  என்றால் அது அதிக நான்  பயோடிகிரேடிபிள் - (non-biodegradable) -  பொருட்கள் என்று பொருள் படும்அதாவது மக்கி மண்ணோடு மண்ணாகஅழுகி மறையாத பொருட்கள் என்று பொருள்படும்). சுற்றுப்புறச்சூழல் பற்றிய அக்கறையை எழுப்பினாலும் பிளாஸ்டிக் தயாரிப்பை எப்படிக் குறைப்பது, தினசரி வாழ்க்கையில் அதற்கான பங்கை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. பிளாஸ்டிக்கைச் சமாளிக்க மூன்று `ஆர்களை  நினைவில் கொள்ள வேண்டும்.
ரெட்யூஸ் (குறைப்பு) - (Reduce)
ரி சைக்கிள் (மறு சுழற்சி) - (Recycle)
ரி யூஸ் (மீண்டும் உபயோகிப்பது) - (Reuse )
நம்முடைய வாழ்க்கையில் பிளாஸ்டிக்கைக் குறைக்க வேண்டுமெனில் நாம் குறைந்த பட்சம் பிளாஸ்டிக்கினால் உறையிட்டப்படாத  பொருட்களை வாங்க வேண்டும். மிகவும் நன்றாக பாக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கும், அதன் தரத்திற்கும் ஒரு தொடர்பு இருப்பதாக நினைத்து அத்தகைய பொருட்களை வாங்கும் ‘இயற்கை’யான குணம்  குடிகொண்டிருக்கும் இந்த அபாயகரமான நிலையினை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்தத் தவறான எண்ணத்தை “பிளாஸ்டிக் இயற்கையின் நண்பன் அல்ல” என்கிற விழிப்புணர்வு மூலம் தான் சமாளிக்க வேண்டும்.
மறு சுழற்சி: மறுசுழற்சி என்பது வீணான பொருட்களிலிருந்து மற்ற உபயோகத்திற்குப் பயன்படக்கூடிய கச்சாப் பொருட்களாகத் தயாரிப்பதாகும். மறுசுழற்சி அமைப்புகள் மற்றும் முனிசிபல் நிர்வாகத்தினரால் நிறுவப்பட்ட,  பல வேதியியல் முறைகளையும், செயலாக்கங்களையும் உள்ளடக்கிய பிரத்யோக இயந்திரத்தின் மூலம் இதைச் செய்ய முடியும். ஆகையால் மாணவர்கள் தங்கள் வீடுகளில் ஆர்கானிக் கழிவையும், பிளாஸ்டிக் கழிவையும் இரு வேறு குப்பை வாளிகளில் பிரித்துப் போட வேண்டும். இது முனிசிபல் நிர்வாகத்தினருக்கு பெருமளவில் உதவும்.
மீண்டும் உபயோகித்தல்: ஏற்கனவே உபயோகிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை மீண்டும் உபயோகிப்பதன் மூலம் அதிகப்படியான பிளாஸ்டிக் உபயோகிப்பது குறைவதுடன் பழைய பிளாஸ்டிக்கை அதிகப்பட்சம் உபயோகிக்கவும் முடிகிறது. கைவிடப்பட அல்லது கழிவு என்று ஒதுக்கிய பிளாஸ்டிக்கிற்கு புதிய உபயோகத்தைக் கண்டுபிடித்து மறுபடியும் உபயோகித்தல் ஆகும். இதற்குக் குறைவான முயற்சியுடன், சிறிய அளவிலான தேவைக்கேற்ற செயலாக்கம் போதுமானது. நீடித்து உழைக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளை மீண்டும் உபயோகிக்குமாறு சூப்பர்மார்க்கெட்டுகள்  கூறுவது ஒரு உதாரணம் ஆகும். இதனால் ஒவ்வொரு முறையும் ஷாப்பிங் செய்துவிட்டு பையை வீட்டிற்குக் கொண்டு போவதற்குப் பதில் ஒரே பையை பல முறை உபயோகிக்கலாம். பெரிய பிளாஸ்டிக் கேனை குப்பைத் தொட்டியாகவும், சிறிய கேனை செடிகள் வைப்பதற்கு அல்லது மாவு அள்ளுவதற்கும் குப்பை அள்ள ஒரு தட்டாகவும் உபயோகிக்கலாம். இந்த நடவடிக்கையை மாதமொருமுறை மேற்கொள்ளலாம். இது போலக் குறிப்பிட்ட வகைப் பிளாஸ்டிக்கை மீண்டும் வேறு எதற்காவது உபயோகப்படக்கூடிய பொருளாக மாற்றும்    நூதனமான யோசனைகள் மாணவக் குழுக்களுக்கு வரக்கூடும்.
பிளாஸ்டிக் நாட்களுக்கு முன்னால் இருந்த நாகரிகம் பற்றி பேசுவது மிகவும் சுவராசியமாக இருக்கும். எப்படி மண் பாத்திரங்களில் சமையல் செய்யப்பட்டது, வாழை இலை தட்டாகப் பயன்படுத்தப்பட்டது, சாக்கு மற்றும் சணல் பைகள் எப்படி கடைக்கு எடுத்துச் செல்லவும், உணவை பாதுகாக்கவும் பயன்பட்டது என்பது பற்றி நீங்கள் பேசலாம். இந்தக் கலந்துரையாடல் நாம் பிளாஸ்டிக்கை எந்த அளவிற்கு நம்பி இருக்கிறோம் என்பதை மாணவர்களுக்கு உணர வைக்கும். பிளாஸ்டிக்கிற்கு முன்பிருந்த பொருட்களை பற்றிய அறிவு பிளாஸ்டிக் அல்லாத மாற்றுப் பொருளை பற்றி கண்டறிவதற்கு அனுமதிக்கும். உதாரணமாக, மால்ட்டா போன்ற நாடுகளில் வெவ்வேறு அளவிலான டிரம்கள் எல்லைச்சுவராகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது போல ஆப்பிரிக்காவில் கேன் மற்றும் பாட்டில்கள் கொண்டு செய்யப்படும் பொம்மைகள் மாணவர்களிடத்தில் மிகவும் பிரசித்தம். எந்த சமுதாயத்தில் மறு உபயோகம் மற்றும் மறு சுழற்சி போன்றவை பொருளாதாரத் தேவையோ அங்கு ஒவ்வொரு பொருளுக்கும் மறைந்திருக்கும்  மாற்று உபயோகங்கள் உண்டு. 
மாணவர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க, குழந்தையிடம் உள்ள துப்பறியும் தன்மையை தூண்டிவிட்டு வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படும் குப்பைகளுக்கு என்ன ஆகிறது என்பதை கண்டறியுமாறு செய்ய வேண்டும். சிறிய அளவில் குப்பைகளை சேகரிப்பவர்களும், உள்ளாட்சி அமைப்புகளும் குப்பைகளை பிரித்து எடுப்பார்கள். ஆனால் உலகளாவிய அளவில் மக்கி போவதற்கு நாளாகக்கூடிய கழிவுகளையும், ரேடியோஆக்டிவ்  கழிவுகளையும் மேற்கத்திய நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளிலும், கடலிலும் கொட்டி விடுவார்கள். மாணவர்கள் பொருத்தமான செய்தியைச் சேகரித்து வகுப்பில் பிரசண்டேஷன் செய்யலாம்.
ஏன் பிளாஸ்டிக்கை விலக்க வேண்டும்? சில உண்மைகள்
  • பெரும்பாலான பிளாஸ்டிக் மக்கி போக முடியாதவை. அவைகளை சிறிதாக உடைக்க்வோ, தீங்கற்ற பொருட்களாக மாற்றவோ வாழும் உயிரினங்களினால் முடியாது
  • புதுப்பிக்கமுடியாத வளங்கள் ஆகும். 
  • பெரும்பாலான பிளாஸ்டிக்குகள் தீப்பிடிக்கக்கூடியவை. எனவே தீ உள்ள இடங்களில் (உதாரணம் சமையலறை) எதையும் பிளாஸ்டிக் கொண்டு போர்த்தவேண்டுமெனில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
  • கால்நடை, குதிரைகள், ஆடுகள் போன்றவை பிளாஸ்டிக்கை சாப்பிட்டால் இரப்பையில் அடைத்துக் கொண்டு மூச்சுத் திணறினால் இறந்துவிடும்.  இது பிளாஸ்டிக்கின் தடுத்து நிறுத்தும்  தன்மையைச் சார்ந்தது.  
  • ஊடுருவி செல்லமுடியாததால் அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடை இதற்குச் சான்றாகும். பிளாஸ்டிக் கவர்கள், கேன்கள் முதலியவற்றினால் சாக்கடைக் குழாய்கள் அடைத்துக் கொண்டு தேக்கத்தை உண்டு பண்ணும். 
  • சிறிய குழந்தைகள் பிளாஸ்டிக் பைகளை வைத்துக் கொண்டு விளையாடும்போது தலையின் மேல் கவிழ்த்துப் போட்டுக் கொள்வதின் விளைவாக மூச்சு முட்டல் ஏற்படக்கூடும். குழந்தைகளின் கைகளுக்கு வரும் பிளாஸ்டிக் பைகளில் ஓட்டைகள் போட்டிருக்கவேண்டும் என சில நாடுகளில் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.
நீங்கள் இந்த உண்மைகளையெல்லாம் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்தபின், இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி அவர்களை போஸ்டர் மற்றும் குறியீடுகளை வடிவமைக்கச் சொல்லுங்கள். இது பள்ளிக்கூடம் மற்றும் அக்கம்பக்கத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும். 

No comments: