கோவை: பொதுமக்களுடனான அனைத்து தகவல் தொடர்புகளையும், ஆன்லைனிலேயே மேற்கொள்ளும் செயல்திட்டத்தை யு.ஜி.சி., தொடங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம் முதற்கொண்டு, கல்வி நிறுவனங்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் ஆகியோர், உதவித்தொகைகளுக்கு, எந்த இடையூறும் இல்லாமல், ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
UGC நடவடிக்கைகளில் இடைத்தரகர்களை களையெடுக்கவும் மற்றும் அவற்றில் வெளிப்புறத் தன்மையைக் கடைபிடிக்கவும் இந்த ஆன்லைன் செயல்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், கல்வி நிறுவனப் பணிக்காக நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட ஒருவர், எதனால் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் எதனால் நிராகரிக்கப்பட்டார் என்ற விபரங்கள் UGC சார்பாக ஆன்லைனில் வெளியிடப்படும்.
முடிவு எடுக்கப்பட்ட அதேநாளில், முடிவுகள் வெளியிடப்படும். இந்த அம்சம் வரும் நவம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படும். இந்த அம்சங்களைத் தவிர, தனி வலை பக்கங்களை கட்டமைக்கும் திட்டத்தை UGC வைத்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை, UGC வலைதளம் மூலமாக அணுக முடியும். அந்த வலை பக்கங்கள், ஒவ்வொரு கல்லூரியைப் பற்றியும் விபரங்களைக் கொண்டிருக்கும். மேலும், ஒரு ப்ராஜெக்ட் எதனால் நிராகரிக்கப்பட்டது மற்றும் அதை ஏற்றுக்கொள்வதற்கு என்னவெல்லாம் செய்யப்பட வேண்டும் போன்ற விபரங்களும் வலைப் பக்கங்களில் இருக்கும்.
No comments:
Post a Comment