Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 22 September 2013

சார் கென் ராபின்சன்: கற்கும் புரட்சி வரட்டும்

சார் கென் ராபின்சனுடைய கூர்மையான 2006 இன் ஹாஸ்ய தொடர், இதில் அவர் பாடசாலை கற்பித்தலில் தீவிரமான ஒரு மாற்றம் வேண்டும் என்று வாதிடுகிறார் -- இது குழந்தைகளின் இயற்கையான திறமை மலர்வதர்க்கான ஒரு களத்தை அமைக்கும்.
நான் இங்கே நான்கு வருடங்களுக்கு முன்னர் வந்திருக்கிறேன், எனக்கு நினைவு இருக்கிறது, அந்த நேரத்தில், பேச்சுக்கள் வலை பதிவில் பதியப்பட்டிருக்கவில்லை நான் நினைக்கிறன் அவை டேட்ஸ்டெர்களுக்கு ஒரு பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஓர் DVD தொகுப்பு பெட்டி அவர்கள் அதை ஒரு படித்தட்டில் அடுக்கி வைத்தார்கள், இப்போதும் அது அங்கே தான் இருக்கும்.
(சிரிப்பு)
உண்மையில் க்றிஸ் என்னை அழைத்திருந்தார் நான் பேசிய ஒரு வாரத்திற்கு பின் பின்னர் அவர் சொன்னார் "நாங்கள் பேச்சுக்களை வலைபதிவில் இட இருக்கிறோம் நாங்கள் உங்களுடையதை இடலாமா?" நான் சொன்னேன், "நிச்சயமாக."
அத்துடன் நான்கு வருடங்களின் பின், நான் சொன்னது போல், அது பார்க்கப்பட்டது நான்கு... நல்லது, அது நான்கு மில்லியன் தடவை 
பார்க்கப்பட்டது நான்கு... நல்லது, அது நான்கு மில்லியன் தடவை பதிவிறக்கபட்டுள்ளது. நான் நினைகிறேன் நீங்கள் அதை 20 ஆல் பெருக்கலாம் அல்லது ஏதாவது எத்தனை நபர்கள் பார்த்து இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கு அத்துடன் க்றிஸ் சொன்னதுபோல, ஒரு பசி இருக்கிறது என்னுடைய காணொலிகளுக்கு
(சிரிப்பு)
(கைதட்டல்)
... நீங்கள் உணரவில்லையா?
(சிரிப்பு)
அத்துடன், இந்த நிகழ்ச்சி ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு திட்டம் நான் இன்னொரு நிகழ்ச்சியை உங்களுக்கு தருவதற்கு, எனவே இதோ.
(சிரிப்பு)
அல் கோர் பேசினார் நான்கு வருடத்திருக்கு முன், நான் பேசிய அதே டேட் குழுமத்தில் வானிலை நெருக்கடி பற்றி. நான் அதைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன் என்னுடைய கடைசி பேச்சின் முடிவில். ஆகையால் நான் அதில் இருந்து தொடங்க இருக்கிறேன். ஏன் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், எனக்கு 18 நிமிடம் மட்டுமே இருக்கிறது, ஆகையால், நான் சொன்னதுபோல்...
(சிரிப்பு)
நீங்கள் பாருங்கள், அவர் (அல் கோர்) சரி. என்னவென்றால், அங்கே பெரிய வானிலை பிரச்சினை இருக்கிறது, தெளிவாக. அதோடு நான் நினைக்கிறேன் மக்கள் நம்பவில்லை என்றால், அவர்கள் இன்னும் நிறைய கொண்டு வருதல் வேண்டும். (சிரிப்பு) ஆனால் நான் நம்புகிறேன் இங்கே இன்னொரு காலநிலை நெருக்கடி, அதேபோல் கடுமையுடன், அது அதே மூலத்தில் இருந்து வந்திருக்கிறது, நாம் அதை அதே அவசரத்துடன் அணுக வேண்டும்,அத்துடன் நான் சொல்லவருவது -- அத்துடன் நீங்கள் சொல்லலாம், "பாருங்கள், நான் சரி. என்னிடம் ஏற்கனவே ஒரு காலநிலை பிரச்சினை இருக்கிறது; எனக்கு உண்மையிலேயே இன்னொன்று வேண்டாம்." ஆனால் இது இயற்கை வளத்தின் தொடர்புடைய நெருக்கடி அல்ல இருப்பினும் நான் நம்புகிறேன், அது உண்மையில், மனித வளத்தின் நெருக்கடி.
அடிப்படையில், நான் நம்புகிறேன் கடந்த சில தினங்களாக பேசியவர்கள் சொன்னது போல நாங்கள் மிகவும் குறைந்த உபயோகத்திலேயே திறமையை பயன்படுத்திகிறோம். மிகவும் அதிகமான மக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதிலும், வாழ்கிறார்கள் தங்கள் உண்மையான திறமையை உணராமலேயே அல்லது அதைபற்றி பேச ஏதுமில்லாமல். நான் எல்லா விதமான மனிதர்களையும் சந்திக்கின்றேன் அவர்கள் தாங்கள் எதிலுமே திறமை இல்லாதவர்கள் என்று நினைக்கிறார்கள்.
உண்மையில், நான் இப்போது உலகத்தை இரண்டு பிரிவாக பிரிக்கிறேன் .ஜெரேமி பெந்தம், மிகப்பெரிய திறமையியல் சிந்தனையாளர், ஒருமுறை இந்த வாதம் பற்றி காட்டி இருக்கிறார் அவர் சொன்னார், " இரண்டு விதமான மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள், உலகத்தை இரண்டுவிதமாக பிரிக்கின்ற பிரிவு ஒன்று அத்துடன் இரண்டாக பிரிக்காத பிரிவு." (சிரிப்பு)நல்லது, நான் செய்கிறேன். (சிரிப்பு)
நான் எல்லா விதமான மனிதர்களையும் சந்திக்கின்றேன் தங்களுடைய வேலையில் மகிழ்ச்சி இல்லாதவர்கள் அவர்கள் சாதாரணமாக வாழ்கிறார்கள்வாழ்க்கையுடன் போகிறார்கள். அவர்கள் பெரிய சந்தோஷத்தை வேலையில் பெறுவதில்லை. அவர்கள் அனுபவிப்பதற்கு பதிலாக பொறுத்து கொள்கிறார்கள் வார இறுதிக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் அத்துடன் நான் தங்கள் செய்வதை விரும்புகிற மனிதர்களையும் சந்திக்கிறேன் வேறு எதையும் செய்வதை கற்பனையில் கூட நினைக்காதவர்கள். நீங்கள் அவர்களிடம், "இதை இனிமேல் செய்யவேண்டாம்," என்றால். அவர்கள் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என யோசிப்பார்கள். ஏனென்றால் அது அவர்கள் செய்யும் தொழிலல்ல, அதுதான் அவர்கள். அவர்கள் சொல்வார்கள், "ஆனால் இதுதான் நான், நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இதை நான் கைவிடுவது முட்டாள்தனம், ஏனென்றால் இது என்னுடைய உண்மையான தன்மையை சொல்கிறது." ஆனால் இது போதுமான மக்களுக்கு உண்மையில்லை. மாறாக நான் நினைக்கிறன், உண்மையில், இது நிச்சயமாக சிறிய அளவு மக்கள் மட்டுமே. அத்துடன் நான் நினைக்கிறன், அதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. அதில் மிக பெரியது கல்வி ஏன் என்றால் கல்வி, ஒரு வகையில் அதிகமான மக்களை இடம்பெயர செய்கிறதுஅவர்களுடைய இயற்கையான திறமையில் இருந்து அத்துடன், மனித வளம் இயற்கை வளத்தை போன்றது; அவை அதிகமாக ஆழத்தில் புதைக்கபட்டிருகிறது. நீங்கள் அவற்றை தேடவேண்டியிருக்கும். அவை பூமியின்மேல் சும்மா போடப்பட்டிருக்கவில்லை. நீங்கள் அவை தங்களை வெளிபடுத்தும் வகையில் நிலைமையை அமைக்கவேண்டும். அத்துடன் நீங்கள் கற்பனை செய்யலாம் கல்விதான் அதை செய்யகூடிய வழி என்று.ஆனால் மிக அதிக நேரத்தில், அது அல்ல. உலகத்தின் ஒவ்வொரு கல்வி திட்டமும் இந்த நேரத்தில் திருத்தி அமைக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.அத்துடன் அது போதாது. திருத்தி அமைத்தல் இனிமேல் பயன்படாதுஏனென்றால் அது உடைந்த அமைப்பை திருத்தி அமைத்தல். நமக்கு எது தேவை -- அத்துடன் கடந்த சில தினங்களாக மிகவும் பேசப்பட்ட சொல் -மலர்ச்சி அல்ல கல்வியில் புரட்சி. இந்த நிலை மாற்றம் அடையவேண்டும்இன்னொன்றாக.
(கைதட்ட்டல்)
உண்மையான சவால்களில் ஒன்று அடிப்படையில் கல்வியில் புதுமையை கண்டுபிடித்தல் அடிப்படையில் கல்வியில் புதுமையை கண்டுபிடித்தல்புதிதாய் கண்டுபிடித்தல் கடினம் ஏனென்றால் ஒன்றை செய்வது என்று அர்த்தம் அதன் அதிக பகுதிகளை மக்கள் மிகவும் இலகுவாய் உணரமாட்டார்கள். அப்படியென்றால், தடைகளை அப்படியே ஏற்றுகொள்ளுதல், நாங்கள் நடைமுறையானதென்று நம்பும் விடயங்கள்,திருத்தத்திற்கான மிகப்பெரிய பிரச்சினை. அல்லது நிலைமாற்றத்திற்கானஇயல்பான சிந்தனையின் எதிர்ப்பாட்ச்சி மக்கள் நினைக்கும் விடயங்கள்"நல்லது, அது வேறேந்தவகையிலும் செய்யமுடியாது, ஏனென்றால் அது அந்தவகையில்தான் செய்யமுடியும்."
நான் அண்மையில் அறிந்த ஆபிரகாம் லின்கானின் சொற்றொடர், நான் நினைத்தேன் நீங்கள் அவரின் சொற்றடரை இந்த வேளையில் விரும்புவீர்கள் என்று. (சிரிப்பு) அவர் இதை 1862 மார்கழியில் காங்கிரஸின் இரண்டாவது வருட சந்திப்பில் சொன்னார். இந்த நேரத்தில் என்ன நடந்தது என்று நான் அறியேன் என்பதை நான் உங்களுக்கு சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.பிரித்தானியாவில் அமெரிக்காவின் சரித்திரம் புகட்டபடுவதில்லை (சிரிப்பு)நாங்கள் அதை கட்டுப்படுத்துகிறோம். எங்கள் வழமை உங்களுக்கு தெரியும்.(சிரிப்பு) எனவே, சந்தேகமே இல்லை எதோ அற்புதமானது 1862 மார்கழியில் நடந்துகொண்டிருக்க வேண்டும், எங்களுடன் இருக்கும் அமேரிக்கர்கள்அறிந்திருப்பார்கள்.
அவர் சொன்னது: " கடந்தகால நம்பிக்கை புயல்போன்ற எதிர்காலத்திற்கு போதுமானதல்ல. காலம் கடினத்துடன் உயர அடுக்கபட்டிருக்கிறது, நாங்கள் காலத்துடன் உயர வேண்டும்." அதை நான் மிகவும் விரும்புகிறேன் அதற்கு உயர்வதல்ல, அதனுடன் உயர்வது. "எங்களுடைய நிலைமை புதியது,ஆகவே நாங்கள் புதிதாக சிந்திக்க வேண்டும் அத்துடன் புதிதாக நடைமுறைபடுத்த வேண்டும் நாம் நம்மிலிருந்து விடுபடவேண்டும்அத்துடன் நாம் நம் நாட்டை காப்பாற்றலாம்."
நான் "விடுபடுவது" என்கிற சொல்லை மிகவும் விரும்புகிறேன் உங்களுக்கு அது என்ன என்று புரிகிறதா? நாம் எண்ணங்களால் கட்டுண்டிருக்கிறோம்,நாம் அதை சாதாரணமாக எடுத்திருக்கிறோம் இயற்கையான ஒரு வழியாக, எல்லாவற்றையும் போல. அத்துடன் கூடுதலான நம் எண்ணங்கள் இந்த நூற்றாண்டினை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படவில்லை,ஆனால் சென்ற நூற்றாண்டின் காலத்தை பொறுக்கும் வகையில் இருக்கிறது.எங்களுடைய மனதில் அவற்றால் மயக்கப்பட்டிருக்கிறோம். அத்துடன் நாம் அவற்றின் சிலவற்றில் இருந்து நம்மை விடுபடுத்த வேண்டும். இப்போது, செய்வது சொல்வதை விடவும் இலகு. எதை, இருக்கிறது என்பதால் பிடித்து வைத்திருக்கிறோம், என்பதை அறிவது மிகவும் கடினம். நீங்கள் இருகிறதேன்பதற்காக வைத்திருக்கிறீர்கள் என்பதே காரணம்.
இருக்கிறதென்பதற்காக வைத்திருப்பதில் ஒன்றை கேட்கிறேன். உங்களில் எத்தனை பேர் 25 வயதை விட அதிகமானவர்கள்? அதை நீங்கள் இருக்கிறதேன்பதற்காக வைத்திருப்பதாக சொல்லவில்லை. நாங்கள் அதனுடன் இலகுவாக இருக்கீர்கள் என்பதை நான் மிகவும் நம்புகிறேன். 25 வயதை விட சிறியவர்கள் இருக்கிறீர்கள்? நல்லது. இப்போது 25 வயதை தாண்டியவர்கள், கடிகாரம் கட்டியிருந்தால் கையை உயர்த்த முடியுமா? அது நம்மில் நிறைய பேர் இல்லையா? இதையே அறை நிறைந்த விடலை பிள்ளைகளை கேளுங்கள். விடலை பிள்ளைகள் கடிகாரம் அணிவதில்லைநான் அவர்கள் அணியமுடியாதோ அல்லது அணிவதற்கு தடை என்று சொல்லவில்லை அவர்கள் அதிகளவில் அணிவதை தவிர்க்கிறார்கள் நீங்கள் காரணத்தை பாருங்கள், நாம் டிஜிட்டல் கலாச்சாரத்திற்கு முன்பு வளர்கப்பட்டிருக்கிறோம், நம்மில் 25 ஐ தாண்டியவர்கள். ஆகையால் நமக்கு நேரம் அறிய விரும்பினால், நீங்கள் சொல்வதற்கு என்று ஒன்றை அணியவேண்டும். சிறுவர்கள் இலத்திரனியல் மயமாக்கப்பட்ட உலகில் வாழ்கிறார்கள், அத்துடன் அவர்களுக்கு நேரம் எல்லா இடத்திலும் இருக்கிறது. அவர்களுக்கு இதை செய்வதற்கு காரணமில்லை அத்துடன் நீங்கள் அதை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை இதேப்படிஎன்றால் நீங்கள் எப்போதும் இதை செய்ததால், நீங்கள் செய்துகொண்டிருகிறீர்கள்.என்னுடைய 20 வயது மகள் கேட் எப்போதும் கடிகாரம் அணிந்ததில்லை.அவளுக்கு அதற்கான காரணம் புரியவில்லை அவள் சொன்னது போல "அது ஒரு இயக்கமுள்ள கருவி" (சிரிப்பு) "எவ்வளவு பொருளில்லாதது அது?"அத்துடன் நான் சொன்னேன், "இல்லை இல்லை, அது நாளையும் சொல்கிறது." (சிரிப்பு) "அது நிறைய இயக்கம் உடையது"
ஆனால் நீங்கள் அறியவேண்டும், நாம் கல்விக்காக கட்டுண்டு உள்ள விடயங்கள் இருக்கின்றன இன்னும் சில உதாரணங்களை கூற அனுமதியுங்கள் அதில் ஒன்று ஒற்றை வழி பற்றிய எண்ணம் அது இங்கே தொடங்குகிறது, நீங்கள் ஒற்றை வழியிநூடு செல்கிறீர்கள் அத்துடன் நீங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்தால், முடிவில் நீங்கள் மிச்சமுள்ள வாழ்வுக்கு தயாராகிவிடுகிரீர்கள். டேட் இல் பேசிய அனைவரும் உட்படையாக சொல்லி இருக்கிறார்கள் சிலவேளைகளில் வெளிப்படையாக, வேறு ஒரு கதை, அதாவது வாழ்க்கை ஒற்றை வழியானது அல்ல, அது இயற்கை வழியானது. நாம் கூட்டான வாழ்கையை உருவாக்குகிறோம் நாம் நம் திறமைகளை கண்டறியும் அதேநேரத்தில் சூழ்நிலையின் தொடர்பில் அவை நம் திறமைகளை உருவாக்க உதவுகின்றன ஆனால் உங்களுக்கு தெரியும், நம் விருப்பத்திற்கு அடிமைகளாகி இருக்கிறோம். இந்த ஒருவழிப்பட்ட விடயத்திற்கு. ஒருவழியில் கல்வியின் உச்சம் கல்லூரிக்கு செல்வது. நான் நினைக்கிறன் நாம் மாணவர்களை கல்லூரிக்கு அனுப்புவதிலேயே குறியாக இருக்கிறோம், ஒருவிதமான கல்லூரிக்கு. நீங்கள் கல்லூரிக்கு போக கூடாதென்று சொல்லவில்லை, ஆனால் ஒவ்வொருவரும் செல்லவேண்டும் என்பதில்லை, அத்துடன் எல்லோரும் இப்போதே போகவேண்டுமேன்பதில்லை. சிலவேளை அவர்கள் பின்னர் செல்லலாம், இப்போதே என்றில்லை.
நான் சிலகாலத்திற்கு முன்னர் சான் பிரான்சிஸ்கோவில் இருந்தேன்.புத்தகங்களுக்கு கையொப்பம் இட்டுக்கொண்டிருந்தேன் இந்த மனிதர் அங்கே வந்திருந்தார், அவர் 30களில் இருந்தார். நான் கேட்டேன், "என்ன வேலை செய்கிறீர்கள்?" அவர் சொன்னார், "நான் ஒரு தீயணைப்பு வீரர்." நான் கேட்டேன்,"எத்தனை காலமாக நீங்கள் தீயணைப்பு வீரராக இருக்கிறீர்கள்?"அவர் சொன்னார், "எப்போதுமே, நான் எப்போதுமே தீயணைப்பு வீரனாகத்தான் இருந்திருக்கிறேன்" நான் சொன்னேன்,"நல்லது,எப்போது நீங்கள் அப்படியாவதற்கு முடிவுசெய்தீர்கள்?" அவர், "நான் சிறுவனாக இருந்தபோதே.", அவர் சொன்னார் "உண்மையில் பாடசாலையில் இது ஒரு பிரச்சினையாக இருந்தது, ஏனென்றால், பள்ளியில் எல்லோருமே தீயணைப்பு வீரனாக இருக்க விரும்பினார்கள்." அவர் சொன்னார், " ஆனால் நான் தீயணைப்பு வீரனாக ஆக விரும்பினேன்" அத்துடன் அவர் சொன்னார், "நான் பள்ளியில் முதிர்நிலையில் இருந்தபோது, எனது ஆசிரியர்கள் அதை கவனத்தில் கொள்ளவில்லை இந்த ஒரு ஆசிரியர் அதை உண்மையாக எடுக்கவில்லை. அவர் நான் எனது வாழ்க்கையை வீணடிப்பதாக சொன்னார்.நான் அதை மட்டுமே செய்வதாக தெரிவுசெய்திருந்தால், நான் கல்லூரிக்கு சென்று, ஒரு தொழில்சார் திறமைசாலியாக வரவேண்டும், நான் மிகச்சிறந்த எதிர்காலத்தை கொண்டிருக்கிறேன் அத்துடன் அதை செய்வதால் நான் என்னுடைய திறமைகளை வீணடிக்கின்றேன்." அத்துடன் அவர் சொன்னார், "நான் அவமானப்பட்டேன் ஏனென்றால் அவர் முழு வகுப்பின் முன்பு சொன்னார், அத்துடன் நான் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் இதுதான் எனக்கு தேவைப்பட்டது, நான் பாடசாலையை பூர்த்தி செய்த உடனேயே நான் சேவைக்காக பதிவுசெய்தேன், நான் அங்கிகரிக்கபட்டேன்." அத்துடன் அவர் சொன்னார், " உங்களுக்கு தெரியுமா, நான் அந்த மனிதரை பற்றி அண்மையில் நினைத்து கொண்டிருந்தேன், சில நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் இந்த ஆசிரியரை பற்றி பேசிகொண்டிருக்கும்போது," அவர் சொன்னார், "ஏனென்றால் ஆறு மாதங்களுக்கு முன், நான் அவரின் உயிரை காப்பாற்றினேன்." (சிரிப்பு) அவர் சொன்னார், "அவர் ஒரு கார் விபத்தில் இருந்தார், நான் அவரை வெளியில் எடுத்தேன், முதலுதவி கொடுத்தேன்,அத்துடன் நான் அவரின் மனைவியையும் காப்பாற்றினேன்." அவர் சொன்னார், "நான் நினைக்கிறேன் அவர் இப்போது என்னைப்பற்றி நன்றாக நினைப்பார்."
(சிரிப்பு)
(கைதட்டல்)
உங்களுக்கு தெரியும், எனக்கு, மனித இனம் வெவ்வேறுவிதமான திறமைகளில் தங்கியிருக்கிறது, ஒரே விதமான திறமையில் இல்லை.நம்முடைய சவால்களின் இருதயத்தில் (கைதட்டல்) நம்முடைய சவால்களின் இருதயத்தில் மீளமைப்பதற்க்கு நம்முடைய திறமைக்கான உணர்வு மற்றும் அறிவு. இந்த ஒருவழிப்பட்ட தன்மைதான் பிரச்சினை.
நான் எல்.எ வந்தபோது உத்தேசமாக ஒன்பது வருடங்களுக்கு முன்னர், நான் ஒரு அடிப்படை வாத கட்டளை ஒன்றை கண்டேன், அது நன்றாக உறுதிப்படுதப்படிருந்தது, அது சொன்னது, "கல்லூரி பாலர் வகுப்பில் தொடங்குகிறது." இல்லை, அது அப்படியில்லை. (சிரிப்பு) அது அப்படியல்ல.எங்களுக்கு நேரம் இருந்தால், நான் இதைப்பற்றி மேலும் சொல்லுவேன், ஆனால் எங்களுக்கு நேரம் இல்லை. (சிரிப்பு) பாலர் வகுப்பு பாலர் வகுப்பில் தொடங்குகிறது. (சிரிப்பு) என்னுடைய நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார்,உனக்கு தெரியும், மூன்றுவயது குழந்தை ஆறுவயதுடைய குழந்தையின் அரைவாசி இல்லை. (சிரிப்பு) (கைதட்டல்) அவர்கள் மூன்று வயதுடையவர்கள்
ஆனால், நாம் முந்தைய நிகழ்ச்சியில் கேட்டது போல, அங்கே பாலர் வகுப்பில் சேர்பதற்கு நிறைய போட்டி, சரியான பாலர் வகுப்பை தெரிவுசெய்ய, மூன்று வயதில், மனிதர்கள் நேர்முக பரிட்சைக்குட்படுத்தப்படுகிறார்கள். மகிழ்ச்சியடையாத குழுமத்தின் முன்னால் குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள். உங்களுக்கு தெரியுமா, அவர்களின் திறமை சான்றிதள்களுடன். (சிரிப்பு) பக்கங்களை திருப்பியபடியே சொல்லப்பட்டது, "நல்லது, இவ்வளவுதானா?" (சிரிப்பு) (கைதட்டல்) "நீங்கள் 36 மாதங்கள் இருந்திருக்கிறீர்கள், இவ்வளவுதானா?" (சிரிப்பு) "நீங்கள் அடைந்தது ஒன்றுமில்லை, முதல் ஆறுமாதங்களும் பால்குடித்தது, நான் பார்க்கும் வகையில்." (சிரிப்பு) பாருங்கள், இது நம்பமுடியாதது, ஆனால் இது மனிதர்களை கவர்கிறது.
பழமைவாதம், அடுத்த பெரிய பிரச்சினை நாம் நம் கல்வித்திட்டத்தை வேக உணவு போல் கட்டியிருக்கிறோம். இது அன்றோருமுறை ஜெமி ஒலிவர் சொல்லியதுபோல. உணவு பரிமாற்றத்தில் தர நிர்ணயத்திற்கான இரண்டு கட்டுமானம் இருக்கிறது. ஒன்று வேக உணவு, அங்கே எல்லாம் தரப்படுத்தப்பட்டுள்ளது. மற்றது சகட் மற்றும் மிசெலின் உணவுவிடுதி போன்றது, அங்கே எதுவுமே தரப்படுத்தபடவில்லை. அவை உள்ளக நிலைமைகளை கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாம் நம்மை வேக உணவு வகை கல்விக்கு விற்றுவிட்டோம். அது நம் உணர்வையும் சக்தியையும் ஏழ்மைக்குள்ளாக்குகிறது வேக உணவு நம் உடலை பழுதடைய செய்யும் வேகத்தில்.
(கைதட்டல்)
நான் நினைக்கிறேன் நாம் இங்கே சில விடயங்களை இனம் கண்டுகொள்ளவேண்டும். அதில் ஒன்று, மனித திறமை மிகவும் அகண்ற தன்மையுடையது. மனிதர்கள் மிகவும் வித்தியாசமான விசேட திறமைகளை கொண்டிருக்கிறார்கள். நான் அண்மையில் ஒன்றை அறிந்திருக்கிறேன்எனக்கு சிறுவயதில் ஒரு கிட்டாரை கொடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட எரிக் கிளாப்டன் அவரது முதல் கிட்டாரை பெற்றுக்கொண்ட அதே நேரத்தில்.எரிக்கிற்கு அது நன்றாக பயன்பட்டிருக்கிறது, அவ்வளவுதான் நான் சொல்லுவேன். (சிரிப்பு) ஒருவழியில், அது எனக்கு பயன்படவில்லை. எனக்கு அதை வேலை செய்ய வைக்க முடியவில்லை. எவ்வளவு அதிகமாக, எவ்வளவு கடுமையாக நான் முயன்றும் அது வேலை செய்யவே இல்லை
ஆனால் இது அதுபற்றியது மாத்திரமல்ல. இது எதை மிகவும் விரும்புகிறோம் என்பதை பற்றியது. அதிகமாக மக்கள் எதை விரும்பாமல் இருக்கிறார்களோ அதிலே சிறந்து விளங்குகிறார்கள். இது எதை மிகவும் விரும்புகிறோம் என்பதை பற்றியது. அத்துடன் எது நம் உயிரையும் சக்தியையும் கிளர்ந்தெழ செயகிறது என்பது பற்றியது. நீங்கள் எதை செய்வதற்கு மிகவும் விரும்புகிறீர்களோ அதை செய்யும்போது அதில் நீங்கள் சிறப்பாக இருக்கிறீர்கள். நேரம் ஒரேயடியாக வேறொரு பாதைக்கு கொண்டுசெல்கிறதுஎன்னுடைய மனைவி இப்போதுதான் ஒரு நாவலை எழுதிமுடித்தார், நான் நினைக்கிறேன், அது ஒரு சிறந்த புத்தகம். ஆனால் இறுதியில் அவர் பல மணிநேரங்களுக்கு மறைந்துவிடுவார். உங்களுக்கு இது தெரியும், நீங்கள் மிகவும் நேசிப்பதை செய்யும்போது, ஒரு மணிநேரம் ஐந்து நிமிடங்கள் போலிருக்கும். நீங்கள் உங்களுக்கு உணர்வுக்கு விரோதமான அதிர்வுள்ளதை செய்யும்போது, ஐந்து நிமிடம் ஒரு மணிநேரம் போல் இருக்கும். பல மனிதர்கள் கல்வியை தெரிவு செய்யாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் அவர்களின் உள்ளுணர்வில் அதை உணராமை தான், இது அவர்களின் சக்தியிலோ உள்ளுணர்விலோ உணரப்படுவதில்லை.
ஆகவே நான் நினைக்கிறேன் நாம் நம் உவமைகளை மாற்றவேண்டும். நம் தொழிற்சாலை போன்ற கல்வி அமைப்பில் இருந்து, தொழில்மயமாக்கபட்ட அமைப்பிலிருந்து, எது தனிவழிபட்டதோ அதிலிருந்து, கூட்டாக தரப்படுத்தலில் இருந்து வெளியேறவேண்டும். நாம் ஒரு அமைப்புக்கு செல்லவேண்டும் அந்த விவசாயத்திற்கான நடைமுறைகள் உள்ளதிற்கு.மனித மலர்ச்சி என்பது இயந்திரமயமான செயற்பாடு அல்ல, என்பதை நாம் அடையாளம் காண வேண்டும் அது ஒரு இயற்கை சார்ந்த செயற்பாடு.அத்துடன் நீங்கள் மனித மேன்மையை படுதலின் பயனை கணிக்க முடியாது;நீங்கள் செய்ய கூடியதேல்லாம், ஒரு விவசாயி போல அவர்களுக்கான பதபடுத்த பட்ட கட்டமைப்பை உருவாக்கலாம் அவர்கள் மலர தொடங்குவார்கள்
ஆகவே நாம் மாற்ற முயற்சிக்கின்ற , திருத்தி அமைக்கின்ற கல்வியை பார்க்கும்போது, இது ஒன்றில் இருந்து இன்னொன்றை உருவாக்குவது போலன்று. அங்கே KIPP போன்ற மிகச்சிறந்தவை இருக்கின்றன, இது மிகச்சிறந்த அமைப்பு. மிகச்சிறந்த கட்டமைப்புகள் இருக்கின்றன. இது எங்களின் நிலைபாடுகளை எங்களுகேற்றவாறு செய்வது அத்துடன் தனிப்பட்ட கல்வி செய்வது போன்றது, உண்மையில் நீங்கள் கற்பிக்கும் மாணவர்களுக்கு அதை செய்வதால், நான் நினைக்கிறேன் அதுதான் எதிர்காலத்திற்கு பதில் ஏனென்றால் இது புதிய தீர்வை வளர்ப்பது போன்றதல்ல; இது கல்வியில் புதிய நடைமுறையை உருவாக்குவது போன்றது இதில் மனிதர்கள் தங்களுக்கான தீர்வை கண்டுபிடிப்பார்கள்,ஆனால் வெளியில் இருந்து வரும் தனிபடுத்தப்பட்ட பாடத்திட்டத்தின் உதவியுடன்.
இப்போது, இந்த அறையில், இங்கே வியாபார வளம் கொண்டவர்களாகபந்தரதகவலில், இணையத்தில் தங்களை முதன்மை படுத்தும் மனிதர்கள் இருக்கிறார்கள். இந்த நுட்பங்கள் மிக அபூர்வமான ஆசிரியர்களின் திறமைகளுடன் சேர்த்து, ஒரு கல்வி புரட்சியை உருவாக்கும் வாய்ப்பை வழங்கும். அத்துடன் நாங் உங்களை இத்துடன் தொடர்பு கொள்ளும்படி விரும்பி கேட்கிறேன் ஏனென்றால் இது நமக்கு மட்டும் அதிமுக்கியமானதன்று, நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும்.ஆனால் நாம் இந்த தொழிற்சாலை முறை அமைப்பை விவசாய முறை அமைப்பிற்கு மாற்ற வேண்டும். அதனால் ஒவ்வொரு பாடசாலையும் நாளை மலரட்டும். அங்கே தான் சிறுவர்கள் வாழ்கையை உணர்கிறார்கள்.அல்லது வீட்டில், அங்கே தான் அவர்கள் படிக்க விரும்பினால்.அவர்களுடைய உறவினர்களுடன், அல்லது நண்பர்களுடன்.
கனவுகள் பற்றி நிறைய நிறைய பேச்சுகள் சமீப நாட்களில் உள்ளன.அத்துடன் நான் மிகவும் விரைவாக -- நேற்று இரவு நான் நட்டலி மெர்ச்சன்ட் இன் பாடலால் மிகவும் பாதிக்கப்பட்டேன் பழைய கவிதைகளில் மீள்கண்டுபிடிப்பு. நான் உங்களுக்கு ஒரு மிக சிறிய கவிதையை விரைவாக படிக்க இருக்கிறேன் W.B. யீட்ஸ் உடைய கவிதை, உங்களில் சிலருக்கு அவரை தெரிந்திருக்கலாம். அவர் இதை அவரது காதலி மாவுட் கொன்னேக்கு, எழுதினார், அவர் வருத்ததுடன் ஒரு உண்மையை சொல்கிறார்அவரால் அவளுக்கு அவள் உண்மையில் எதை அவரிடமிருந்து எதிர்பார்த்தாளோ அதை கொடுக்க முடியவில்லை அத்துடன் அவர் சொல்கிறார், "நான் உனக்காக வேறொன்று வைத்திருக்கிறேன், இது ஒருவேளை உனக்காக இருக்காது."
அவர் இதை சொல்கிறார்: நான் வானத்தின் துணிகளை கோர்த்திருக்கிறேன்,தங்க பின்னல்களுடன் வெள்ளியின் ஒளியுடன், நீலத்துடன், மங்கலுடன்இருண்ட துணியான இரவின், வெளிச்சத்தின், அரை வெளிச்சத்தின், நான் உன்காலடியில் துணிகளை விரிக்கிறேன் ஆனால், நான் ஏழையாய் இருப்பதால், நான் என் கனவுகளை மட்டும் கொண்டிருக்கிறேன் நான் என் கனவுகளை உன் காலடியில் விரித்திருக்கிறேன்; மெதுவாக நட ஏனென்றால் நீ என் கனவுகளின் மேல் நடக்கிறாய்." ஒவ்வொரு நாளும், எல்லா இடத்திலும் நம் பிள்ளைகள் அவர்கள் கனவை நம் காலடியில் விரிக்கிறார்கள். ஆகவே நாம் மென்மையாக காலடி எடுத்து வைக்கவேண்டும்.
நன்றி.
(கைதட்டல்)
உங்களுக்கு மிக்க நன்றி.

No comments: