Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 3 May 2013

பிளஸ்–2 தேர்வு முடிவை தெரிந்துகொள்ள இணையதள முகவரிகள்



தமிழ்நாட்டில் 8 லட்சத்து 50 ஆயிரம்பேர் பிளஸ்–2 தேர்வு எழுதி உள்ளனர். அவர்கள் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி இருக்கிறார்கள். தேர்வு முடிவு 9–ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. முடிவு 4 அரசு இணையதள முகவரிகளில் வெளியிடப்படுகிறது. அது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண். வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

2013 மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த பிளஸ்–2 தேர்வுக்கான முடிவுகள் 9–ந்தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவை மாணவர்கள் உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தேசிய தகவல் மையத்தில் 16 மையக்கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அரசு இணையதள முகவரிகள் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
 http://tnresuts.nic.inhttp://dge1.tn.nic.inhttp://dge2.tn.nic.inhttp://dge3.tn.nic.in இவற்றில் http://dge3.tn.nic.in என்ற இணையதள முகவரி GPRS/WAP வசதியுடன் கூடிய செல்போனிலும் தேர்வு முடிவு தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும் மற்றும் மாநிலத்தில் உள்ள அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் மாணவ–மாணவிகள் கட்டணமின்றி தேர்வு முடிவை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

செல்போனில் குறுந்தகவல் சேவை (எஸ்.எம்.எஸ்) மூலமும் கட்டணமின்றி தேர்வு முடிவை தெரிந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறுந்தகவல் சேவை மூலம் தெரிந்துகொள்ள கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து 8–ந்தேதி அன்று தெரிவிக்கப்படும்.

மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் மூலம் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: