Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 24 April 2013

மே 9ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு?


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், மே 10ம் தேதிக்குள் வெளியாகி விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மே, 9ம் தேதி வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

முதல்வருக்கு பிடித்த எண், 9 என்பதாலும், அன்று, அமாவாசை என்பதாலும், அன்றயை தேதியில், தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், மே, 10ம் தேதியோ அல்லது அதை ஒட்டினாற்போலவோ, தேர்வு முடிவை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம் என, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

"ஆன்-லைன்" விண்ணப்பமும் ஏற்பு: பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தில், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை மாணவர்கள் பதிய வேண்டும். மே, 10ம் தேதிக்குள், பொதுத் தேர்வு முடிவு வெளியாகி விட்டால், அடுத்த, 10 நாட்களுக்குள், மாணவர்கள், விண்ணப்பங்களை அனுப்பி விடலாம். 

"ஆன்-லைன்" வழியாகவும், பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்த முழுமையான விவரங்கள், மே, 3ம் தேதி வெளியாகும் அறிவிப்பில் பார்த்து, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

No comments: