Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday 24 April 2013

தமிழ்நாடு பட்ஜெட் 2013-14



           மிழக அரசின் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்- 2013-2014-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை, 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21-ஆம் நாள் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்தார்.

பொருளாதாரச் சூழ்நிலை 


*  பொருளாதார வளர்ச்சி குறைந்தும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை குன்றியும் உள்ள இன்றைய கடுமையான தேசிய பொருளாதாரச் சூழலிலில், இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பேரியல் பொருளாதார மேலாண்மையிலும் நிதிநிலைச் சீரமைப்பு நடவடிக்கைகளிலும் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள திறமையான நடவடிக்கைகளைப் பொறுத்தே, நாட்டினுடைய பொருளாதாரம் புத்துயிர் பெற வாய்ப்புள்ளது. ஆனால், பொருளா தாரம் நலிலிந்துவரும் போக்கை மாற்றவும் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் வேண்டிய இந்த இரட்டைக் குறிக்கோள் களை எய்துவதற்கான எந்த ஒரு உறுதிப் பாட்டையும் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் வரவு- செலவுத் திட்டம் வெளிப்படுத்தவில்லை என்பது வருத்தத்திற் குரியதாகும். 


*  பொருளாதார வீழ்ச்சியின் தாக்கத்தை, குறைந்துவரும் வளர்ச்சியின் மூலமாக, மாநில அரசு ஏற்கெனவே உணரத் தொடங்கியுள்ளது. 2012-2013-ஆம் ஆண்டிற்கான முன் மதிப்பீடுகளின் அடிப் படையில், நிலையான விலை மதிப்பின்படி, மாநிலத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.61 சதவீதம் மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள் ளது. கடுமையான வறட்சி, காவேரிப் பாசனப் பகுதியில் பயிர் பாதிப்பு ஆகிய          வற்றால் முதன்மைத் துறையின் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சேவைத் துறையின் வளர்ச்சியையும் அது பாதித்துள்ளது. தேசியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, மின் தட்டுப்பாடு ஆகியவற்றால் உற்பத்தித் துறையின் வளர்ச்சியும் பாதிப்படைந்துள்ளது.


எனினும், இத்தடைகளால் தளர்ந்து விடாமல், துரிதமான வளர்ச்சியுடன், அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய வளர்ச்சிப் பாதையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுத்துச் செல்வதில், தமது பங்கினை ஆற்றிட, அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த சவாலான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த வரவு- செலவுத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 


*  முதன்மைத் துறைக்குத் தொடர்ந்து முக்கியத்துவம் அளிப்பதுடன், சேமிப்புக் கிடங்குகள், விற்பனைக் கட்டமைப்பு போன்றவற்றில் முதலீடுகளை அதிகரித்தல்.


*  மின் உற்பத்தி, சாலை இணைப்புகள் போன்றவற்றை வலுப்படுத்த கட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய திட்டங்களில் அதிக முதலீடு செய்து, அவற்றை விரைவாகச் செயல்படுத்துதல்.


*  மாநிலத்தின் பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய பகுதிகளில், குறிப்பாக, தென் மாவட்டங்களில் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடுதல் சிறப்புச் சலுகைகள்.


*  அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் வளர்ச்சியை மீண்டும் உயர்த்தி உறுதிப்படுத்தவும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு  சிறப்புச் சலுகை.


*  தரம் மிக்க நகர்ப்புறக் கட்டமைப்புகளை ஏற்படுத்திட அதிக நிதி ஒதுக்கீடு.


*  பொருளாதார நிலையில் பின்தங்கிய பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவினர் ஆகியோருக்குத் தேவையான நகர்ப்புர வீட்டு வசதித் திட்டங்களில் கூடுதல் முதலீடு.


*  திறன்மிக்க நிர்வாகத்தின் மூலமாக, சிறப் பாகச் சேவைகளை அளித்து, நலத் திட்டங்களின் செயலாக்கத்தை மேம் படுத்துதல்.


*  உற்பத்தித் திறன்மிக்க, அதிக வருவாய் கிடைக்கக்கூடிய வேலைகளுக்கான திறன் வளர் பயிற்சிகளை இளைஞர்களுக்கு வழங்கவும், வறுமைக் குறைப்பிற்கும் முக்கியத்துவம் அளித்தல்.


*  வறியோர், ஆதரவற்றோரைப் பாது காத்திடும் திட்டங்கள் மூலம் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்.


*  கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து போன்ற சமூக மேம்பாட்டுத் துறைகளுக்கான நிதிப் பயன்பாட்டை அதிகப்படுத்துதல். வறியோர் மீது எந்த ஒரு கூடுதல் வரிச் சுமையையும் சுமத்தாமல், விவேகமான நிதி மேலாண்மை மூலமாக, 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை பொறுப்புடைமை சட்ட நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆண்டுத் திட்டம்


*  மனித வள மேம்பாட்டுக் குறியீட்டின் அனைத்து அம்சங்களிலும், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றிடுவதை, பன்னிரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது. வேகமான வளர்ச்சியுடன், நீடித்து நிலைக்கத்தக்க, அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய வளர்ச்சியைப் பெற்றிடும் பொருளா தாரத்தை உருவாக்குவதே, இந்த பன்னி ரெண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், மாநிலத்தின் மொத்த திட்ட ஒதுக்கீடு 2.11 இலட்சம் கோடி ரூபாய் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்ட நடைமுறையின் விளைவாக, வறுமை ஒழிக்கப்படுவதோடு, கூடுதலான, மேம்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டு, மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் உயர்ந்திடவும் வாய்ப்பு ஏற்படும்.


*  2012-2013-ஆம் ஆண்டின் ஆண்டுத் திட்ட இலக்காகிய 28,000 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக மாநிலம் எய்தும். மேலும், 2013-2014-ஆம் ஆண்டில் இதற்கான ஒதுக்கீடு 37,000 கோடி ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. இதில் முதன்மைத் துறைக் கான ஒதுக்கீடு மட்டும் 20.12 சதவீத                    அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. 


சட்டம் ஒழுங்கு


*  காவலர்களின் எண்ணிக்கையைக் கணிச மாக உயர்த்தி, தமிழ்நாட்டின் ஒரு இலட்சம் மக்கள்தொகைக்கான காவல் துறையினரின் எண்ணிக்கை விகிதத்தை, நமது நாட்டி லேயே மிகச் சிறந்த ஒன்றாக இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. 2012-2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 12,152 காவலர்கள், 377 சிறைக் காவலர்கள் மற்றும் 791 தீயணைப்புப் பணியாளர்கள் தேர்வு  செய்யப்பட்டுள்ள னர். 2013-2014-ஆம் ஆண்டில் 17,138 காவலர்கள், 1,091 துணை ஆய்வாளர்கள், 1,005 தீயணைப்புப் பணியாளர்கள் மற்றும் 292 சிறைக் காவலர்களை இந்த வாரியம் மேலும் தேர்வு செய்யும்.


மின் ஆளுமை முயற்சிகள்


*  சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள், திருமண உதவித்தொகைகள், கல்வி உதவித் தொகைகள், பொதுவிநியோகத் திட்டத்தில் அளிக்கப்படும் பயன்கள், மாணவர்களைப் பதிவு செய்யும்முறை, முதலமைச்சரின் புதிய விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம், விலையில்லா இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ்வழங்கப் படும் பல்வேறு உதவிகளையும், மாநில குடியிருப்போர் தகவல் மையத்தின் மூலமாக, ஆதார் அடிப்படையில் வழங்கு வதற்கான சோதனைத் திட்டம் புதுக் கோட்டை மாவட்டத்தில் செயல் படுத்தப்படும். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் இச்செயல்முறை விரிவுபடுத்தப்படும்.


*  அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற போது, பல துறைகளிலும் அதிக அளவிலான காலிலிப் பணியிடங்களால் மாநில நிர்வாகமே செயலிலிழந்து இருந்தது. இந்த காலிலிப் பணி யிடங்களை நிரப்பத் தேவையான விரைவு நடவடிக்கைகளை அரசு எடுத்தது. இதுவரை, பல்வேறு துறைகளில் இருந்த 1,61,142 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கூட்டுறவுச் சங்கங்களிலும் மற்றும் வங்கிகளிலும் 9,914 பணியாளர்கள் புதிதாக தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இது போன்றே, பொதுத் துறை நிறுவனங்களில் 22,452 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 2011-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை, மொத்தம் 1,93,508 நபர்களைப் பணியமர்த்தி, நிர்வாகத்தை அரசு சீரமைத்துள்ளது. 


வருவாய் நிர்வாகம்


*  வேலைவாய்ப்புத் திட்டங்களையும் இதர நலத்திட்டங்களையும் செயல்படுத்து வதோடு, உலக வங்கி உதவியுடன் செயல் படுத்தப்படும் புதுவாழ்வு திட்டத்தின் கீழ், வறுமையைக் குறைப்பதற்கு சமூகப் பங்கேற்புடன் பொருளாதார மேம்பாட்டு உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன. 2012-2013-ஆம் ஆண்டி லிலிருந்து, புதுவாழ்வு திட்டத்தின் உத்திகளைப் பின் பற்றி, கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக, 60 வட்டாரங் களில் தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் படிப்படியாக இத்திட்டம் மாநிலம் முழுவதிலும் செயல் படுத்தப்படும். 2013-2014-ஆம் ஆண்டில் மேலும் 110 வட்டாரங்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். 2013-2014-ஆம் ஆண்டில், புதுவாழ்வு திட்டத்திற்காக 350 கோடி ரூபாயும், தமிழ்நாடு மாநில கிராமப் புற வாழ்வாதார இயக்கத்திற்கான மாநில அரசின் பங்காக 100 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


*  நகர்ப்புற வறுமைக் குறைப்பிற்கான சுவர்ண ஜெயந்தி ஷகரி ரோஸ்கார் யோஜனா திட்டத்திற்காக 2013-2014-ஆம் ஆண்டில் மொத்தம் 99.73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புர வறுமை நிலையில், குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திட, 2012-2013-ஆம் ஆண்டில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் தொடங்கப்பட்டது. நகர்ப்புறவறுமைக் குறைப்பினை இலக்காகக் கொண்டுள்ள அனைத்துத் திட்டங்களையும் ஒருங் கிணைத்து, அதில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை நிறைவு செய்ய, தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பெறப்படும் நிதி பயன்படுத்தப்படுகிறது. 2013-2014-ஆம் ஆண்டிலும் இத் திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


உள்கட்டமைப்பு


*  2013-2014-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக 2,000 கோடி ரூபாயும், திட்ட வடிவமைப்பு நிதிக்காக 200 கோடி ரூபாயும் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளன.


வேளாண்மை


*  2013-2014-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் முதன்மைத் துறைக்கான மொத்த ஒதுக்கீடு 17,220.89 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 4,829.93 கோடி ரூபாயாக இருந்த, வேளாண் துறைக்கான ஒதுக்கீடு, 2013-2014-ஆம் ஆண்டில், இதுவரை இல்லாத அளவில்  அதாவது 5,189.15 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


*  கடந்த இரண்டாண்டுகளில், வேளாண் உற்பத்தித் திறனைப் பெருக்கி, மாநிலத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சியை ஏற் படுத்துவதற்கான வலுவான அடித் தளத்தை அரசு அமைத்துள்ளது


*  2012-2013-ஆம் ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திற்கு 669 கோடி ரூபாய்க்கான ஒப்புதலை தமிழகம் பெற்றுள்ளது. இது மாநிலத்திற்கு இதுவரை கிடைத்திராத உயர் ஒதுக்கீடாகும்.


* இத்திட்டத்திற்காக, 2013-2014-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 700 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.


கூட்டுறவு


*  நடப்பு நிதியாண்டில், 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் வரையில் 3,720 கோடி ரூபாய் கூட்டுறவு நிறுவனங்களால் பயிர்க் கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2013- 2014-ஆம் ஆண்டில் பயிர்க்கடன் வழங்கு வதற்கான ஆண்டுக் கடன் திட்ட இலக்கு 39,135 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. கூட்டுறவு அமைப்புகள் மூலமாக இந்த ஆண்டு வழங்கப்படும் பயிர்க் கடன்களுக்கான இலக்கு 4,000 கோடி ரூபாயாகும். வரும் நிதியாண்டில் இந்த இலக்கு 4,500 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்.


கால்நடை பராமரிப்பு


*  விலையில்லாக் கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை வழங்கும் முன்னோடித் திட்டம், இரண்டு வெற்றிகரமான ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதுவரை, 24,000 கறவைப் பசுக்களும், 10 இலட்சம் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளும் மாநிலம் எங்கும் விநியோகிக்கப் பட்டுள்ளன. இந்த வெற்றிச் சகாப்தத்தைத் தொடரும் வகையில் 2013-2014-ஆம் ஆண்டில், 12,000 கறவைப் பசுக்களும், 1.5 இலட்சம் நிலமற்ற ஏழைப் பெண்களுக்கு ஆறு இலட்சம் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளும் வழங்கப்படும். இதற்காக 250 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.


ஆவின் செயல்பாடு


*  பால் உற்பத்தித் துறையில் அரசு எடுத்த முயற்சிகளின் விளைவாக, மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் சங்கங் களின் பால் கொள்முதல், உயர் உற்பத்திக் காலங்களில் நாளொன்றுக்கு 27.14 இலட்சம் லிலிட்டர் என்ற உயர் அளவை எட்டியுள்ளது


கோழி வளர்ப்பு


*  ஓசூரில் 45.96 கோடி ரூபாய் செலவில் கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கோழி வளர்ப்பு பிரபலமாகாத பகுதி களிலும் கோழி வளர்ப்பை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் நல்ல பலன்களை அளிக்கத் தொடங்கியுள்ளன. 2013-2014- ஆம் ஆண்டிலும், இத்தகைய பகுதிகளில் கோழி வளர்ப்பை ஊக்குவிக்க 25 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.


மீனவர் நலன்


*  மீனவர்களின் நிலையை மேம்படுத்தி அவர்கள் வாழ்வை வளம்பெறச் செய்ய, மீன்பிடிப்பு குறைவாக உள்ள காலங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4,000 ரூபாய் நிவாரணம் அளித்தது, மீன் பிடிப்பு தடைசெய்யப்பட்ட காலங்களில் வழங்கப் படும் நிவாரணத்தை 1,000 ரூபாயிலிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தியது மற்றும் மானியத்தோடு எரிபொருள் வழங்குவது போன்ற பல்வேறு சிறப்பான முயற்சிகளை  அரசு எடுத்துள்ளது. மேற்கூறிய நலத் திட்டங்களுக்காக 2013-2014-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.


உணவு பாதுகாப்பு


*  மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மீதான முடிவு எத்தகையதாக இருப்பினும் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய பொது விநியோகத் திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும். அனைவருக்கும் உணவு கிடைக்கச் செய்து, மாநிலத்திலிலிருந்து பசிப் பிணியை அறவே அகற்றும் வண்ணம், 2011 ஜூன் மாதத்தி லிலிருந்து அரிசி பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விலை யில்லா அரிசியை இந்த அரசு வழங்கி வருகிறது. இன்றி யமையாப் பொருள்களின் விலை உயர்விலிலிருந்து ஏழை எளிய மக்களைப் பாது காப்பதற்கான சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் ஆகிய வற்றையும் மானிய விலையில் இந்த அரசு வழங்கி வருகிறது.


*  உணவு மானியத்திற்காக 2013-2014-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 4,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் நல்ல தரமான அரிசி கிடைக்கச் செய்யும் வகையில், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏழு அரிசி ஆலைகள் 26.27 கோடி ரூபாய் செலவில் நவீனமயமாக்கப் பட்டுள்ளன. 2013-2014-ஆம் ஆண்டில் இக்கழகம் மேலும் ஏழு அரிசி ஆலைகளை 32.6 கோடி ரூபாய் செலவில் நவீனமய மாக்கும். நவீன அரிசி ஆலைகளின் திறனை உயர்த்துவதோடு, அரவை செய்து அளிக்கும் அரிசியின் தரத்தையும் இந்த நடவடிக்கைகள் உயர்த்தும்.


நீர்ப்பாசனம்


* காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், காவேரி மேலாண்மை வாரியத் தையும், காவேரி நீர் முறைப் படுத்தும் குழுவையும்  அமைப்பதற்காக இந்த அரசு உரிய முயற்சி களை எடுத்து வருகிறது. இந்த  அமைப்பு களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசிற்கு உத்தர விடக் கோரி 18.3.2013 அன்று உச்ச நீதிமன்றத்தை அரசு அணுகி யுள்ளது. வரும் ஆண்டிலிருந்து, தமிழ் நாட்டிற்கு காவேரி நீரில் உரிய பங்கினைபெற கர்நாடகத்தைக் கட்டாயப் படுத்த இது உறுதியாக வழிவகுக்கும்.


நீர் வளப்பாதுகாப்பு


* 36,000 பாசன ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை புனரமைப்பதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன. இவற்றில், 13,699 ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப் பாட்டிலும், எஞ்சியவை ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளன.


* ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியோடு, பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக்  குறைப்பதற்காக, காவேரிப் பாசனப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தை 1,560 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த இந்த அரசு ஏற்கெனவே உத்தேசித்துள்ளது.


பெரும் அணைகள் சீரமைப்பு


*  அணைகள் சீரமைப்பு, மேம்படுத்துதல் திட்டத்திற்கான திட்ட ஒப்பந்தம் ஏற்கெனவே உலக வங்கியுடன் கையெழுத் திடப்பட்டுள்ளது. இதன் மொத்தத் திட்ட மதிப்பீடு 745.49 கோடி ரூபாய். இதில் அணைப் புனரமைப்புப் பணிகளை மேற் கொள்வதற்காக 2013-2014-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 390 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.


உள்நாட்டு ஆறுகள் இணைப்பு


*  மாநிலத்திற்கு இடையே பாயும் பெரும் நதிகளை இணைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசை வலிலியுறுத்தி வரும் அதே நேரத்தில், நமது மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைப்பதற்கான திட்டங்களை அரசு ஏற்கெனவே தொடங்கி செயல்படுத்தி வருகிறது. தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டம், கட்டளை கதவணையுடன் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றின் பணிகள் நடைபெற்று வருகின்றன.


*  மாநில அரசின் இந்தத் திட்டங்களுக்கு 2013-2014-ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தில் 156.44 கோடி ரூபாய் நிதி யொதுக்கம் செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நதி இணைப்புத் திட்டமான பெண்ணையாறு-பாலாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவில் தொடங்கும்.


சென்னையில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்வழித்தடங்களைச் சீரமைத்தல்


*  ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு நிதி நிறுவனத்தின் உதவியோடு செயல் படுத்தப் பட்டு வரும், தமிழ்நாடு பல்லுயிரினப் பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டம், 2013-2014-ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப் படும். இத்திட்டத்திற்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2012- 2013-ஆம் ஆண்டில், மாநிலத்தில் உள்ள தரமிழந்த வனப்பகுதிகளில்  நீர்வளப் பாதுகாப்பு மற்றும் பசுமை மேம்பாட்டுத் திட்டம், நபார்டு வங்கியின் நிதியுதவியோடு 50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப் பட்டு வருகிறது. 2013-2014-ஆம் ஆண்டில் கூடுத லாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்.


தொழில்துறை


*  நமது நாட்டின் தொழில் உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டின் நிலை வலுவானதாக உருவெடுத்துள்ளது. வாகன உற்பத்தி, இரசாயனப் பொருட்கள், பெட்ரோலிலியப் பொருட்கள், உணவு பதப்படுத்துதல், மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, ஆகியவை மட்டுமன்றி புதிய தொழில் நுட்பங்களாகிய மென்பொருள் மற்றும் உயிரியல் தொழில்நுட்பங்களிலும் முன்னணி மாநிலமாகத் தமிழகம் உருவெடுத்துள்ளது. தொழில் உற்பத்தித் துறையில் நமது நாட்டின் மொத்த உற்பத்தி அளவில், தமிழகத்தின் பங்கு சுமார் 10 சதவீதம் ஆகும்.


*  மாநிலத்திற்கு மேலும் பல தொழிற் சாலைகளைக் கவரும் வகையில், சிப்காட் நிறுவனம் மூலமாக 25,000 ஏக்கர் நிலப் பரப்பு கொண்ட நில வங்கியை இந்த அரசு ஏற்படுத்தும். தூத்துக்குடியில், பொதுத் துறை - தனியார் துறை பங்கேற்பு வாயிலாக, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் புதிய கப்பல் கட்டும் தளம் ஒன்று அமைக்கப்படும்.


*  2013-2014-ஆம் ஆண்டில், மதுரை- தூத்துக்குடி தொழில் வழித்தடத்தை ஏற்படுத்திட இந்த அரசு ஆவண செய்யும். நான்கு உற்பத்தி மண்டலங்கள், ஒரு வேளாண் வணிக மண்டலம், இரண்டு வணிக முதலீட்டு மண்டலங்கள், ஒரு சிறப்புச் சுற்றுலா மண்டலம், ஒரு கிராமப்புறச் சுற்றுலா மையம் மற்றும் ஒரு அறிவுசார் மையம் ஆகியவற்றை அமைத்திட இத்திட்டத்தில் உத்தேசிக்கப் பட்டுள்ளது.


தகவல் தொழில்நுட்பம்


*  தகவல் தொழில்நுட்பத் துறையில் முதலீடு களை ஈர்ப்பதற்கான கட்டமைப்பு வசதி களையும் மனித வளத்தையும் தமிழகம் பெற்றுள்ளது. அரசு நிறுவனங்கள் மூல மாக சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களாகிய திருச்சி, கோயம் புத்தூர், மதுரை, திருநெல்வேலிலி, ஓசூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு 18.5 இலட்சம் சதுர அடி அலுவலக இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடவசதி முழுவதையும் தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கிராமப்புற வணிக முறை வெளிப்பணி மையங்களை ஊக்கு விக்க 2013-2014-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


நெடுஞ்சாலைகள்


*  4,974 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், 10,764 கிலோமீட்டர் நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள், 46, 279 கிலோமீட்டர் நீளமுள்ள முக்கிய மற்றும் இதர மாவட்டச் சாலைகளைக் கொண்ட தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பு நமது நாட்டிலேயே நீளமான அமைப்புகளில் ஒன்றாகும். பல ஆண்டு களாக, இந்தச் சாலைகளில் வாகனப் போக்குவரத்து பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏற்படும் தேவைகளின் உயர்வைக் கருத்தில் கொண்டு, 2012-2013-ஆம் ஆண்டில் 5,615.71 கோடி ரூபாயாக இருந்த நெடுஞ்சாலைத் துறைக்கான நிதியொதுக் கீட்டை, 2013-2014- ஆம் ஆண்டில் 6,452.77 கோடி ரூபாயாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.


போக்குவரத்து


*  இந்த அரசு பதவியேற்றதிலிலிருந்து 1,026 கோடி ரூபாய் செலவில் 6,000 புதிய பேருந்துகளை வாங்க அனுமதியளித் துள்ளது. இவற்றில், 2,855 பேருந்துகள் ஏற்கெனவே பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இது, பேருந்துகளின் சராசரி வயதை பெருமளவு குறைத்துள்ளது. இதனால், ஒரு லிலிட்டர் எரிபொருளுக்கு பேருந்துகள் செல்லக்கூடிய கிலோ மீட்டர் தூரக் குறியீடும் அதிகரித்துள்ளது. மாநிலப் போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டுமொத்த இழப்பு இன்னும் மிக அதிகமாக உள்ளதால், இப்பிரச்சினையை முழுமை யான முறையில் தீர்க்க வேண்டியுள்ளது.


மின்சாரம்


*  மின்சார விநியோகத்தை மேம்படுத்தி, நுகர்வோருக்கு தடையில்லாத, தரமுள்ள மின்சாரத்தை அளித்திட இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனமும், தேசிய அனல்மின் நிறுவனமும் இணைந்து செயல்படுத்திவரும் வல்லூர் மின் உற்பத்தித் திட்டத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட முதல் அலகு ஏற்கெனவே செயல்படத் தொடங்கி, மின் உற்பத்தியை நிலைப்படுத்தியுள்ளது. மேட்டூர் அனல்மின் உற்பத்தி மூன்றாம் நிலை திட்டத்தின் 600 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட  அலகும், மேற் கூறிய வல்லூர் கூட்டுத் திட்டத்தின் இரண்டாவது அலகும், வட சென்னை இரண்டாம் நிலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது அலகும், சோதனை முறையில் செயல்படத் தொடங்கியுள்ளன. மேற்கூறிய, வட சென்னை மின்உற்பத்தித் திட்டத்தின் 600 மெகாவாட் முதல் அலகு, வரும் மே மாதம் முதலும், வல்லூர் கூட்டுத் திட்டத்தின் மூன்றாவது 500 மெகாவாட் அலகு, வரும் அக்டோபர் மாதம் முதலும் செயல்படத் தொடங்கும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனமும், நெய்வேலிலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து, தூத்துக்குடியில் அமைத்துவரும் மின் உற்பத்தித் திட்டத்தின், தலா 500 மெகா வாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள், முறையே 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும், 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய திட்டங்கள் 3,230 மெகாவாட் அளவிலான கூடுதல் மின்உற்பத்தியை அளிக்கும்


*  நமது நாட்டிலேயே மிக அதிக அளவிலான புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தித் திறன் தமிழகத்தில்தான் உள்ளது. மாநிலத்தின் மொத்த மின் நுகர்வில் 12.6 சதவீதம்           காற்றாலை உற்பத்தியிலிலிருந்து மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. மேலும், கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் உள்ள கரும்பு அரவைக் கழிவிலிலிருந்து 183 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான முன்னோடித் திட்டங்களைத் தமிழகம் மேற்கொண்டுள் ளது. இத்திட்டங்கள் 2013-2014-ஆம்ஆண்டிலிலிருந்து செயல்படத் தொடங்கும். இந்த நிதியாண்டில், இந்த மின் உற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்த பல்வேறு சர்க்கரை ஆலைகளுக்கு குறுகிய காலக் கடனாக 352 கோடி ரூபாய் வழங்க            அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


*  2013-2014-ஆம் ஆண்டில், தேர்வு செய்யப் பட்ட சுற்றுலா மையங்களில் அடிப்படை வசதிகளை இத்திட்டத்தின் மூலம் மேம்படுத்த 67.91 கோடி ரூபாய் அளவி லான பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், ""தமிழ்நாட்டிற்கு செல்வோம் 2014'' என்ற உத்தியின் அடிப்படையில் சுற்றுலா மேம்பாட்டிற்கான விளம்பரப் பணிகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2013- 2014-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் சுற்றுலாத் துறைக்காக 153.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்


*  பல்வேறு மருத்துவக் குறியீடுகளில் தமிழகம் தனது முன்னணி நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது. சிறப்பான பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு முறை, தடுப்பூசி போடுதல், அடிப்படை பேறுகால வசதிகள், சிறந்த பள்ளிச் சுகா தாரத் திட்டம் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பாகச் செயல்படக்கூடிய பொதுச்சுகாதார அமைப்பினை ஏற்படுத்த எடுக்கப் பட்டுள்ள தன்னிகரில்லா முயற்சிகள் பல்வேறு மன்றங்களில் பாராட்டப் பட்டுள்ளன. இத்துறைக்காக 2013-2014- ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 6,511.76 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.


*  இந்தியாவிலேயே மிக அதிக அளவாக, தமிழகத்தில் 99.8 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. 2012-2013-ஆம் ஆண்டில், 6,23,795 பயனாளிகளுக்கு, மொத்த நிதியுதவியாக 597.48 கோடி ரூபாய் இத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. 2013-2014-ஆம் ஆண்டில், இத்திட்டத்திற்காக 720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


* இதுவரை, 623.58 கோடி ரூபாய் அளவில், 2,84,228 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பயனளித்துள்ளது. வரும் ஆண்டில் இத் திட்டத்திற்காக 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பள்ளிக் கல்வி


*  அனைத்துத் துறைகளிலும் மிக உயர்ந்த ஒதுக்கீடாக பள்ளிக் கல்வித் துறைக்கு, 2013-2014-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 16,965.30 கோடி ரூபாய் நிதி யொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.


* 2011-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிப்பதற்கான சட்ட விதிகளை அரசிதழில் வெளியிட்ட முதல் மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும். கல்வி கற்பதற்கான உரிமைக் குறியீடுகளை எய்துவதில், குறிப்பாக, மொத்தப் பள்ளிச் சேர்க்கை மற்றும் இடைநிற்றல் அளவுகளில், மிகச் சிறப் பாகக் கருதப்படும் மாநிலங்களுள் தமிழகமும் ஒன்று. 2011-ஆம் ஆண்டு, இந்த அரசு நிர்வாகப் பொறுப்பேற்ற பின்னர், 51,757 ஆசிரியர்களும், 7,275 ஆசிரியர்            அல்லாத பணியாளர்களும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இடைநிற்றலைக் குறைத்து மேல்நிலைப் பள்ளி  அளவில் மாணவர்கள் தக்கவைப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக 10, 11, மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையை அரசு வழங்கி வருகிறது. 2013-2014-ஆம் ஆண்டு 381 கோடி ரூபாய் அளவிலான பணப் பயனை 24.76 இலட்சம் மாணவ மாணவியர்கள் பெறுவார்கள்.


*  பள்ளிகளைத் தரம் உயர்த்தியதாலும் அதிகரித்துள்ள மாணவர்களின் எண்ணிக் கையாலும் 2,733 பள்ளிகளுக்குக் கூடுதல் கழிப்பறை வசதிகளும், குடிநீர் வசதிகளும் ஏற்படுத்த வேண்டியுள்ளது.


*  32.79 இலட்சம் மாணவியர்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்க 54.63 கோடி ரூபாய். இப்பயன்களை, மாணவ மாணவியர் களுக்கு அளித்திட, மாநில அரசுக்கு மொத்தமாக 1,299.74 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.


உயர் கல்வி


*  கடந்த இரண்டாண்டுகளில் இந்த அரசு 22 புதிய கலை-அறிவியல் கல்லூரிகளையும், ஒரு அரசுப் பொறியியல் கல்லூரியையும் திறந்துள்ளது. மேலும், பத்து புதிய அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளையும், இரண்டு புதிய அரசுப் பொறியியல் கல்லூரிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


*  2013-2014-ஆம் கல்வியாண்டில் இந்திய தகவல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், பாரதி தாசன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் செயல்படத் தொடங்கும். முதலமைச்சர் ஏற்கெனவே அறிவித்தவாறு கூடுதலாக எட்டு கலை-அறிவியல் கல்லூரிகள், 2013-2014-ஆம் ஆண்டிலிலிருந்து செயல்படத் தொடங்கும்.  2010-2011- ஆம் ஆண்டில், 6,09,915 ஆக இருந்த உயர் கல்வி மாணவர் களின் சேர்க்கை, 2012-2013-ஆம் ஆண்டில், 6,51,807 ஆக உயர்ந்துள்ளது. 2012-2013-ஆம் ஆண்டில் முதல் தலைமுறை பட்டதாரி களுக்கு கல்விக் கட்டணத்தை அளிக்கும் திட்டத்தின் மூலம் 518 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2013-2014-ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப்பட்டு, 673 கோடி ரூபாயாக அனுமதிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டு மேம்பாடு


*  விளையாட்டுக்கு ஊக்கம் அளிப்பதை இளைஞர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் முக்கியமான கருவியாக அரசு கருதுகிறது. 2012-2013-ஆம் ஆண்டு  சென்னையில் புதிய ஓடுதளங்கள் அமைக்க வும், நேரு விளையாட்டு அரங்கத்தை மேம் படுத்தவும் 40 கோடி ரூபாய் அரசு அனுமதி யளித்தது. 2010-2011-ஆம் ஆண்டில் 31.26 கோடி ரூபாயாக இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைக்கான மொத்த ஒதுக்கீடு, 2013-2014-ஆம் ஆண்டில் 112.50 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், ஓடுதளங்கள், விளை யாட்டு அரங்கங்கள் போன்ற விளை யாட்டுக் கட்டமைப்புகளை மேம்படுத்து வதற்கு இந்த அரசு சிறப்பு முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்த முயற்சிகள் வரும் ஆண்டிலும் தொடரும்.


மாநில நிதி ஆணையம்


*  நான்காவது மாநில நிதி ஆணையம் தனது அறிக்கையை மாநில அரசுக்கு ஏற்கெனவே அளித்துள்ளது. இந்த அறிக்கையையும், இதன் பரிந்துரைகளின் மீது இந்த அரசு எடுத்துள்ள முடிவுகள் குறித்தும் விளக்கும் நடவடிக்கைக் குறிப்பு, இந்த கூட்டத் தொடரிலேயே சட்டமன்றத்தில் சமர்ப் பிக்கப்படும். நான்காவது மாநில நிதி யாணையம் பரிந்துரைத்தவாறே சொந்த நிதி வருவாயில் 10 சதவீதம் உள்ளாட்சி  அமைப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.


*  சூரிய ஒளி மின்வசதி கொண்ட பசுமை வீடுகள் திட்டம், நமது நாட்டிலேயே ஒரு முன்னோடி முயற்சியாகும். கடந்த இரண்டாண்டுகளில் 2,160 கோடி ரூபாய் செலவில் 1,20,000 வீடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 2013-2014-ஆம் ஆண்டிலும் 60,000 பசுமை வீடுகள் அமைக்கப்படும். மேலும், இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 2013-2014-ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும்.


*  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டுத் திட்டத்தில், 2012-2013-ஆம் ஆண்டில் 470 கோடி ரூபாய் செலவில் 16,153 பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. 2013-2014-ஆம் ஆண்டிலும் இத்திட்டத்திற் காக 470 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது


*  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப் பட்ட பணிகளை முடிப்பதிலும், மொத்தச் செலவினத்திலும், நமது நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. 2013-2014-ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக நமது மாநிலத்திற்கு 6,341.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


*  1.4.2013-லிலிருந்து இத்திட்டத்தில் அளிக்கப் படும் தினக்கூலிலி 132 ரூபாயிலிலிருந்து 148 ரூபாயாக உயர்த்தப்படும்


நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்


*  வேகமான நகரமயமாதலால் அதிகரிக்கும் தேவைகளை நிறைவு செய்ய நீண்டகாலத் திட்டமிடுதலும், தொலைநோக்கும் தேவைப்படுகின்றன. எனவே, நகர்ப்புறங் களின் முக்கியக் கட்டமைப்புத் தேவை களான சாலைகள், குடிநீர் வழங்கல், கழிவு நீர் அகற்றல், வடிகால் மேலாண்மை மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றை நிறைவு செய்வதற்கு அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது.


*  நெம்மேலிலியில், நாளொன்றுக்கு 100 மில்லிலியன் லிலிட்டர் கடல் நீரைக் குடிநீராகச் சுத்திகரிக்கக்கூடிய நிலையத்தை முதலமைச்சர் அண்மையில் தொடங்கி வைத்தார். சென்னையின் தற்போதைய நீர் சேமிப்பு அளவை உயர்த்திடுவதற்காக, கண்ணன் கோட்டை, தேர்வாய்க் கண்டிகை கிராமங்களின் அருகில் 330 கோடி ரூபாய் செலவில் ஒரு புதிய நீர்த்தேக்கம் அமைப் பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், சோழவரம், போரூர், நேமம், அயனம் பாக்கம் ஏரிகளின் கொள்திறனை உயர்த்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காக 2013-2014 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 50 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.


*  ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் ஃப்ளுரோசிஸ் குறைப்புத் திட்டத்தை அரசு விரைந்து செயல் படுத்தி வருவதால் இதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும். இத்திட்டத்திற் காக, 2013-2014-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் நிதி யொதுக்கம் செய்யப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், வேலூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் முக்கியக் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்காக, 2013-2014-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 212.54 கோடி ரூபாய் நிதி யொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.


நகர்ப்புற வீட்டுவசதி


*  இந்த நிதியாண்டில் 1,530.45 கோடி ரூபாய் செலவில் 5,954 வீடுகளை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அமைத்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் 18,055 குடியிருப்புகளுக்கான பணிகளை 2013-2014- ஆம் ஆண்டில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் நிறைவேற்றி முடிக்கும். மேலும், 12,845 புதிய குடியிருப்புகளை 1,936.91 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கான பணிகளையும் 2013-2014-ஆம் ஆண்டில் இவ்வாரியம் தொடங்கும். வரும் மூன்றாண்டுகளில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமும் இணைந்து, பல்வேறு திட்ட நிதிகளைப் பயன்படுத்தி, குறைந்த வருவாய்ப் பிரிவினர் மற்றும் பொருளா தாரத்தில் நலிலிந்த பிரிவினரின் வீட்டு வசதித் தேவைகளை நிறைவு செய்ய, 50,000 வீடுகளை அமைப் பதற்கான பணிகளை மேற்கொள்ளும். தற்போதுள்ள குடிசைப் பகுதிகளை மறுமேம்பாடு செய்வதும் இத்திட்டத்தில் ஓர் அங்கமாக இருக்கும்.


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்


*  2013-2014-ஆம் ஆண்டிற்கான, ஆதி திராவிடர் துணைத் திட்டத்திற்கு 7,042 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து, இது, 2012- 2013-ஆம் ஆண்டிற்கான ஒதுக் கீட்டைவிட 15.29 சதவீதம் கூடுதலாகும்.


*  தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர்களுக்கும் உயர் கல்வி உதவித் தொகை வழங்க அரசு எடுத்துள்ள நடவடிக்கை, மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2013-2014-ஆம் ஆண்டில், உயர் கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக 420.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, இதே பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் பள்ளிக் கல்வி உதவித் தொகைக்காக 59.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியின மாணவ மாணவியர்களின் கல்வி உதவித் தொகைக் கான ஒதுக்கீடு, சென்ற ஆண்டைவிட 10.62 சதவீதம் கூடுதலாக, அதாவது, 479.87 கோடி ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.


 நடப்பாண்டில் ஜமுனாமரத்தூர், கொல்லிமலை, ஆனைகட்டி, பச்சைமலை, கல் வராயன் மலை ஆகிய இடங்களில் ஐந்து புதிய பல்தொழில்நுட்பப் பயிற்சி நிலையங்கள் தொடங்க அனுமதிக்கப் பட்டுள்ளது. இது தவிர, பல்வேறு பிற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்காக, 2013-2014-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மீண்டும் 50 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.


சிறுபான்மையினர் நலன்


*  பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி, மாநிலத்தில் சமூகநீதியை இந்த அரசு நிலை நாட்டியுள்ளது. இவர்களின் மேம் பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டு தோறும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. 2013-2014-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக, 764.43 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப் பட்டுள்ளது.


பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்


*  டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டம், பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்கள், விதவைகள் மற்றும் கைவிடப்பட்ட பெண் களுக்கான உதவித் தொகைத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை களுக்கான சிறப்பு ஊக்க உதவித் தொகை போன்ற திட்டங்களில் வழங்கப்படும் நிதியுதவியை கணிசமான  அளவில் உயர்த்தி, இந்த அரசு புரட்சிகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விலை யில்லாக் கறவைப் பசுக்கள், செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில், பயன் பெறும் அனைத்து பயனாளிகளும் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது. திருமாங்கல்யத்திற்காக, நான்கு கிராம் தங்கக் காசோடு, உயர்த்தப் பட்ட திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்காக 2013-2014-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 750 கோடி ரூபாய்  நிதி யொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.


குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம்


*  சென்னை, வேலூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் சோதனை முறையில் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு வண்ண உடைகள் வழங்குவதற்கான திட்டம் 2012-2013-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. 2013-2014-ஆம் ஆண்டில் விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம் மற்றும் திருநெல்வேலிலி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.


முதியோர், ஆதரவற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் நலன்


*  சமூகப் பாதுகாப்பு உதவித் தொகைத் திட்டங்களில் வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவியை, ஆயிரம் ரூபாயாக அரசு உயர்த்தியுள்ளது. முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம் போன்ற திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 2010-2011-ஆம் ஆண்டில் 23.71 இலட்சமாக இருந்தது. இது 2012-2013-ஆம் ஆண்டில் 30.72 இலட்சமாக உயர்ந்துள்ளது.


மாற்றுத் திறனாளிகளின் நலன்


*  கடும் ஊனமுற்றோர், மனநிலை பாதிக்கப் பட்டோர் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்குவதற்காக, 2013-2014-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 131.05 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப் பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 2013-2014-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 263 கோடி ரூபாய் நிதியொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.


தொழிலாளர் நலன்


*  அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற    பின்னர், 17 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்கள் மூலமாக 7.16 இலட்சம் தொழிலாளர்களுக்கு 178.86 கோடி ரூபாய் நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளது.


பட்ஜெட் நிதி ஆதாரங்கள்


*  மத்திய அரசு தன்னுடைய வரி வருவாய் இலக்கினை எய்த மீண்டும் தவறியுள்ளது. இதன் விளைவாக, மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய மத்திய வரி வருவாயின் பங்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் குறைந் துள்ளது. நம்முடைய மொத்த வருவாயில், மத்திய வரிப் பகிர்வில் மாநில அரசின் பங்கு குறைந்து கொண்டே வருகிறது. 2007-2008-இல் 17 சதவீதமாக இருந்த இந்த விகிதம், 2012-2013- இல் 14.7 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தப் போக்கினால், மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரங்களை நாம் மேலும் சார்ந்திருக்கும் நிலை அதிகரித்துள்ளது. மத்திய  அரசிடமிருந்து பெறும் மானியங்கள் இத்தகைய இடர் பாடான தருணங்களில் கூட மாநிலத்திற்கு உதவிட மனமில்லாத வகையில் மத்தியஅரசின் போக்கு உள்ளது. இந்த சூழலிலில், பேரறிஞர் அண்ணா  1962-ஆம் ஆண்டில், பாராளுமன்ற மாநிலங்களவையில் தீர்க்கதரிசனமாக ஆற்றிய உரையே எனக்கு நினைவுக்கு வருகிறது. ""தொழில் வளர்ச்சி யில் தென்னிந்தியா புறக்கணிக்கப்படுகிறது. புதிய உருக்கு ஆலை இல்லை. புதிய இருப்புப்பாதை இல்லை. பெட்ரோலிலியம் சுத்திகரிப்பு நிலையம்கூட இல்லை. குறிப்பிடத்தக்க தொழில் திட்டங்கள் எதுவும் தென்னிந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இரும்பு உருக்கு ஆலையினை உருவாக்காமல், கனரக அமைச்சரவை பொறுப்பு மட்டுமே ஒரு தென்னிந்தியருக்கு வழங்கப்பட்டுள்ளது. "இதுவா அரசியல் திறன்?' என பேரறிஞர் அண்ணா முழங்கியுள்ளார்.


*  பல ஆண்டுகள் கடந்து விட்டாலும் அறிஞர் அண்ணாவின் இந்த வார்த்தைகள் இத்தருணத்திலும்கூட இன்றைய சூழலை எதிரொலிலிப்பதாக உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசில் பல அமைச்சர்கள் பங்கு பெற்றுள்ளனர். ஆனால் அவர்களால் நமக்கு விளைந்த பயன் என்ன?


*  மத்திய அரசின் 2013-2014-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2013-ஆம் ஆண்டு நிதி நிலைச் சட்ட வரைவில் மிகவும் பிற்போக் கான, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான பிரிவுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங் களின் வருவாயிலிலிருந்து, மாநில அரசு பெறக்கூடிய சட்டப்பூர்வமான கட்டணங் களை மத்திய அரசின் வருமான வரி விதிவிலக்கில் கழித்துக்கொள்ள இயலாது என மத்திய அரசின் 2013-ஆம் ஆண்டு நிதி நிலைச் சட்டவரைவு பிரிவு 7-ன் கீழ் கூறப் பட்டுள்ளது. இதனால், மாநிலத்திற்கு நியாயப்பூர்வமாகக் கிடைக்கும் வரி மற்றும் வரியல்லாத வருவாயைக் குறைத்து, மத்திய அரசு தனது வருமானத்தினை பெருக்கக் கருதியுள்ளது. இச்செயல் மாநில அரசுகளின் வருவாயின்மேல் விதிக்கப்படும் மறைமுக வரிவிதிப்பாக அமைந்துள்ளதால், இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 289-ல் மாநில அரசுகளின் வருவாய் மீது அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் வரி விலக்குக்கு எதிராக அமைந்துள்ளது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணாகவும், தவறான திட்டமிடுதலாலும் தேவையற்ற வழிமுறையைப் புகுத்தும் இப்பிரிவினை உடனடியாக விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசை வலிலியுறுத்துகிறோம்.


*  2013-2014-ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில், திட்டச் செலவினத்தில் 20 சதவீதத்தை குறைத்துவிட்ட காரணத்தால், மாநில அரசின் நிதியைத் திட்டமிடுவதில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற் பட்டுள்ளது. நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தொகை மறுக்கப்பட்டும், தாமதப்படுத்தப்பட்டும் வருகிறது. சுருக்க மாகக் கூறினால், போதிய திறமையின்மை காரணமாக, மாநிலத்திற்கான திட்ட ஒதுக் கீட்டைக் குறைத்து, நிதிப்பற்றாக்குறை யினைச் செயற்கையாகக் குறைத்து காட்டும் மத்திய அரசின் நடவடிக்கையால், மாநில அரசுகளுக்குத்தான் அதிக சுமை ஏற் பட்டுள்ளது. உதாரணமாக, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட வெள்ளத் தடுப்புத் திட்டங்களுக்கு, தமிழக அரசால் செல வழிக்கப்பட்ட 395 கோடி ரூபாயினை, கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு விடுவிக்கவில்லை. இதே போன்று, அனைவருக்கும் கல்வித் திட்டம், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு இயக்கம் போன்ற திட்டங்களிலும், கணிசமான தொகை மத்திய அரசிடமிருந்து வரவேண்டியுள்ளது.


மாநில அரசின் சொந்த வரி வருவாய்


*  இந்தியப் பொருளாதாரத்தில் நிலவிவரும் பொதுவான மந்தநிலை, மாநில பொருளா தாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினை கருத்தில் கொண்டு, இந்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிவிதிப்போ, நடை முறையிலுள்ள வரி விகிதத்தினை உயர்த்து வதோ தேவையில்லையென முதலமைச்சர்  முடிவு செய்துள்ளார்.


 2012-2013-ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டை காட்டிலும், 2013-2014-ஆம் ஆண்டில், மாநிலத்தின் சொந்த வரிவருவாய் 17 சத விகிதம் உயருமென மதிப்பிடப் பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் இலக்கு 86,065.40 கோடி ரூபாய் என அரசு நிர்ணயித்துள்ளது. வணிக வரி 56,025.24 கோடி ரூபாயாகவும், ஆயத் தீர்வை 14,469.87 கோடி ரூபாயாகவும், மோட்டார் வாகன வரிகள் 4,881.15 கோடி ரூபாயாகவும் இருக்கும் என மதிப் பிடப் பட்டுள்ளது. 2013-2014-ஆம் ஆண்டில், பத்திரப் பதிவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ள தால், முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் மூலம் 9,874.22 கோடி ரூபாய் வசூலாகும் எனவும் கணிக்கப் பட்டுள்ளது.


பொதுக்கடன் 


*  2012-2013-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட நிகர பொதுக் கடன் 20,716 கோடி ரூபாயாகும். இருப்பினும்,           அரசின் கடன் சுமையினை கட்டுப்படுத்த அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நிதி நெருக்கடிகளுக்கு இடை யிலும் 15,675 கோடி ரூபாய் மட்டுமே 2012-2013-ஆம் ஆண்டில் நிகரக் கடனாகப் பெறப்பட்டுள்ளது. இந்த நிகரக் கடன், மூலதனச் செலவினத்தைக் காட்டிலும் குறைவாக இருப்பதால், இந்த கடன் முழுவதும் மூலதனச் செலவுகளுக்கு மட்டுமே செலவிடப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில், கடனின் அளவு 24.5 சதவீதம் வரை இருக்கலாம் என்ற வரையறை இருந்தாலும், கடன் அளவு 18.98 சதவீதம் என்ற அளவில் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. 2013-2014-ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கப்பட்ட நிகரக் கடன் அளவு 24,263 கோடி ரூபாயாக இருப்பினும், மூலதன செலவிற்காக 21,142 கோடி ரூபாய் மட்டுமே நிகரக் கடனாகப் பெற இந்த அரசு உத்தேசித்துள்ளது.


எதிர்கால கணிப்புகள்


*  வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு 2013-        2014- ல் வணிக வரியின் மூலம் பெறப்படும் வரவுகள் ரூ.56,025.24 கோடியாகஇருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பை விட 17.62 சதவீதம் வளர்ச்சி கொண்டதாக இருக்கும். இவ்வுயர் வளர்ச்சி விகிதமானது, சிறந்த வரி நிர்வாகத்தின் மூலமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதன் முழு பலன் 2013-2014 -ஆம் ஆண்டில் ஏற்படும். மேலும், சில கூடுதல் ஆதாரங்களைத் திரட்டுவதற்கான நடவடிக்கைகளும் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப் பட்டுள்ளன.


*  2013-2014-ஆம் ஆண்டில் ஆயத்தீர்வை வரவுகள் ரூ.14,469.87 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அதிக வளர்ச்சி விகிதம் இருந்ததைக் கருத்தில் கொண்டு, திருத்த மதிப்பீடு 2012-2013-ஐ விட 16 சதவீதம் உயர்வாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.


* இந்த அரசு நில வழிகாட்டி மதிப்பீட்டு உயர்வை அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும், 2013-2014-ஆம் ஆண்டில் முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவு மூலமாகக் கிடைக்கும் வரவுகள், 15.93 சதவீதம் அளவிற்கு வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 2012-2013-ஆம் ஆண்டில் இவ்வினத்தின் கீழ் பெறப்பட்ட ரூ.8,516.87 கோடி வருவாயை விட உயர்ந்து, 2013-2014- ஆம் ஆண்டில் ரூ.9,874.22 கோடியாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


* நடப்பு நிதியாண்டிலிலிருந்து மோட்டார் வாகன வரியினைத் திருத்தி அமைப்பதால், இவ்வினத்தின் வளர்ச்சி அதிகமாக, அதாவது 16 சதவீத அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 2013-2014- ஆம் ஆண்டில் இவ்வினத்தின் கீழ் பெறப்பட்ட ரூ.4,191.42 கோடி வருவாயை விட உயர்ந்து, 2013-2014-ஆம் ஆண்டில் ரூ.4,881.15 கோடியாக இருக்கும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


வரி அல்லாத வருவாய்


*  வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு 2013         -2014 -ல் வரி அல்லாத வருவாய் ரூ.6,765.09 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இனத்திற்கு நமது மாநிலத்தில் குறைந்த வாய்ப்புகளே உள்ளதாலும், பெரும்பாலான அரசு சேவைகள் விலை இல்லாமலோ அல்லது குறைந்த விலையிலேயே வழங்கப் படுவதாலும், திருத்த மதிப்பீடு 2012- 2013-ஆம் ஆண்டு அளவிலிலிருந்து குறைவான அளவிலேயே வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014-2015 மற்றும், 2015-2016-ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் 3 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மத்திய வரிகளில் மாநில அரசின் பங்கு


*  மத்திய அரசு பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர வரி வருவாயில் தமிழக அரசின் பங்கினை, சேவை வரியைப் பொறுத்த வரையில் 5.374 சதவீதத்திலிலிருந்து 5.047 சதவீதமாகவும், ஏனைய வரிகளைப் பொறுத்த வரையில் 5.305 சதவீதத்திலிலிருந்து 4.969 சதவீதமாகவும் குறைத்து பதிமூன்றாவது நிதிக்குழு நிர்ணயித்துள்ளது. மத்திய வரிகளில் பங்கு 2013-2014-ஆம் ஆண்டிற்கான மைய              அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் குறிப் பிட்டுள்ளவாறு ரூ.17.285.66 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 2014-2015 மற்றும் 2015-2016-ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் 15 சதவீதமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.


*  மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள், 2013-2014-ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்ட மதிப்பீட்டில் மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் ரூ.8,463.71 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு திட்டம் மற்றும் திட்டம்சாராப் பணி களுக்கான நிதியுதவிகள், மற்றும் 13-வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ள நிதியுதவி ஆகியன கருத்தில் கொள்ளப்பட்டன. 2014-2015, 2015-2016- ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


*  வருவாய்க் கணக்கில் செலவுகள் 2013-2014 ஆம் ஆண்டிற்கான வருவாய்க் கணக்கு செலவுகள் ரூ.1,17,915.81 கோடியாக மதிப் பிடப்பட்டுள்ளது. இது திருத்த மதிப்பீடு 2012-2013-ஐக் காட்டிலும் 15 சதவீதம் கூடுதலாகும். அதிக அளவிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கியது, நடை முறையிலுள்ள திட்டங்களுக்கான உதவித் தொகைகளை உயர்த்தியது மற்றும், காலிலிப் பணியிடங்களைத் திட்டமிட்டு நிரப்பியது போன்றவையே இந்த உயர்வுக்குக் காரணம்


*  2013-2014-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் மானியம் மற்றும் உதவித்தொகைக்கான ஒதுக்கீடு ரூ.45,176.06 கோடியாகும். இலவச அரிசி வழங்கு வதாலும், பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியத் தொகைகளின் உயர்வாலும், பல்வேறு திருமண உதவித் திட்டங்கள் மற்றும் மகப்பேறு உதவித் திட்டங்களின் உதவித் தொகை உயர்வாலும், கறவை பசுக்கள், ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் இலவசமாக வழங்குவதாலும், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் உயர்வுக் கேற்ப உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகமாக நிதி பகிர்ந்தளிக்கப்படுவதாலும், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கூடுதல் உதவித் தொகை வழங்குவதாலும் அதிக ஒதுக்கீடு அவசியமாகிறது.


*  2014-2015 மற்றும் 2015-2016-ஆம் ஆண்டு களில் இதன் வளர்ச்சி விகிதம் 15 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.


*  2012-2013 திருத்த மதிப்பீட்டைக் காட்டிலும் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு 2013-2014-ல் ஊதியம் அல்லாத செயல்முறை மற்றும் பராமரிப்பு செலவுகள் 15 சதவீதம் அதிகரித்துள்ளன.


*  இந்த உயர்வு, இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குதல் போன்ற திட்டங்களால் ஏற்பட்டுள்ளது. 2014-2015, 2015-2016-ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.


*  2013-2014-ஆம் ஆண்டில் மாநில அரசு வாங்க அனுமதிக்கப்பட்ட கடன் அளவு ரூ.24,263 கோடியாகும். இருப்பினும், அரசு கடன் வாங்குவதைக் குறைக்க உத்தேசித் துள்ளது. மாநில அரசு தொகுநிதியில் நிகர கடன் வாங்குதல் ரூ.21,142.47 கோடியாக மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளது. 31.03.2014  அன்று வருங்கால வைப்பு நிதி போன்றவை உள்ளிட்ட ஏனைய கடன் ரூ.1,55,129.62 கோடியாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 19.18 சதவீதமாகும். 

No comments: