360 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம்
தமிழகத்தில் மாநில அளவிலான சீனியாரிட்டி பட்டியலின் அடிப்படையில் 360 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுகின்றனர்.
மாநில வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின் அடிப்படையில் விடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். தமிழ்-154,
ஆங்கிலம் 48,
கணிதம் 75,
இயற்பியல் 14,
வேதியியல் 6,
தாவரவியல் 5,
விலங்கியல் 2,
வரலாறு-5,
புவியியல் 5 பேரும் நியமனம் செய்யப்படுகின்றனர்.
மேலும், தெலுங்கு பாடத்தில் தெலுங்கு பண்டிட் 6, கணிதம் 10, இயற்பியல் 3, வேதியியல் 2, தாவரவியல் 1, விலங்கியல் 1, வரலாறு 5, புவியியல் 2 பேரும் நியமிக்கப்படுகின்றனர். இதனைத் தவிர மலையாள பாடத்தில் கணிதம் 5, இயற்பியல் 1, வேதியியல் 1, தாவரவியல் 1, வரலாறு 2, புவியியல் 1, உருது பாடத்தில் கணிதம் 3, இயற்பியல், வேதியியல், வரலாறு, கன்னட பாடத்தில் கணித பாடத்தில் ஒருவரும் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு, இதில் தகுதியானவர்களின் பட்டியல் கல்வித் துறைக்கு அனுப்பபடுகிறது. தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில், காலியிடங்களில், தகுதியான பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளை நியமனம் செய்யவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment