Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 22 March 2012

TNTET- 2012 ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள்


                             ஆசிரியர் தகுதித் தேர்வு மாதிரி வினாத்தாள்



          பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு தேசிய மற்றும் மாநில அளவில் தகுதித் தேர்வினை நடத்தி, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி வழங்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை அடுத்து, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

                தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வான TNTET தேர்வு வரும் ஜூன் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி மார்ச் 22ம் தேதி துவங்கியுள்ளது. இந்த நிலையில், இத்தேர்வு நடைபெறும் விதம் குறித்து விளக்க வேண்டியது நமது கடமையாகிறது.
அதாவது, ஒன்றரை மணி நேரம் நடைபெறும் இத்தேர்வில் 150 கேள்விகளைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்படுகிறது. தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் கிடையாது.
                 கருப்பு அல்லது நீல நிற பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். கேள்வித்தாளும், விடைத்தாளும் ஒரே கோட் எண்களைக் கொண்டதாக இருக்கிறதா என்பதை ஆசிரியர்கள் சரிபார்த்து தவறாக இருந்தால் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். சரியான பதிலை தேர்வு செய்து எழுதும் வகையிலான 150 கேள்விகளுக்கு ஒரு கேள்விக்கு 1 மதிப்பெண் வீதம் மொத்தம் 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
              இந்த தேர்வு 5 உட்பிரிவுகளைக் கொண்டதாகும். 1. குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும், 2. தமிழ்/தெலுங்கு/மலையாளம்/கன்னடம்/உருது, 3. ஆங்கிலம், 4. கணிதம், 5. சுற்றுச்சூழல் படிப்பு ஆகிய பாடங்களின் கீழ் ஒவ்வொரு பிரிவிற்கும் தலா 30 கேள்விகள் கேட்கப்படும்.
    சரியான பதிலை கவனமாக குறிப்பிடவும். பதிலை திருத்த வொய்ட்னர் பயன்படுத்த அனுமதி இல்லை.
பொதுவாக இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்பதால் தற்போது இத்தேர்வை எழுதும் ஆர்வம் அதிகரித்துள்ளது. 150க்கு 90 மதிப்பெண் அதாவது 60% மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்கப்படுவர்.
            1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் முதல் தாளையும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 2ம் தாளையும் தேர்வில் எழுத வேண்டும். எந்த வகுப்பையும் எடுக்கத் தயாராக இருக்கும் ஆசிரியர்கள் இரண்டு தாளையும் எழுத வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மாதிரி வினாத் தாள் மாதிரிகள் இங்கே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

No comments: