Wednesday, 2 April 2014

தமிழக அரசின் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு அழைப்பு

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் 15ம், மாணவியருக்கான விளையாட்டு விடுதிகள் 10ம் உள்ளன. இங்கு மாணவ, மாணவியருக்கு தங்கும் இடம், விளையாட்டுச் சீருடை, உணவு,  விளையாட்டுப் பயிற்சி ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்பு படிக்கும் விளையாட்டுத் திறன்மிக்க மாணவர்கள் அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். மாணவ, மாணவியருக்கான சேர்க்கை மாவட்ட தேர்வு, மாநில தேர்வு மற்றும் கலந்தாய்வின் அடிப்படையில் நடைபெறும்.
மாவட்ட விளையாட்டு அலுவலகங்களில் விண்ணப்பங்களை ஏப்ரல் 25க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment