Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 3 October 2015

நாளை முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கலந்தாய்வு: 10,000 மாணவர்களுக்கு அழைப்பு


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க விரிவுபடுத்தப்பட்ட 3-ஆம் கட்ட கலந்தாய்வு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) தொடங்குகிறது.
÷இந்தக் கலந்தாய்வில் மொத்தம் 67 எம்.பி.பி.எஸ்.இடங்கள், 8 அரசு பி.டி.எஸ். இடங்கள், மொத்தம் 143 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
÷ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4), திங்கள்கிழமை (அக்டோபர் 5) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
÷உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்கள், மூன்று கட்ட கலந்தாய்வுக்குப் பிறகும் மாணவர்கள் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் ஆகியவை இந்த விரிவுபடுத்தப்பட்ட 3-ஆம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.
இணையதளத்தில் வெளியீடு: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 52 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ள 15 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 8 பிடிஎஸ் காலியிடங்கள், மதுரை பெஸ்ட் பல் மருத்துவக் கல்லூரி சமர்ப்பித்துள்ள 33 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் உள்பட மொத்தம் 143 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் காலியிடங்கள் ஆகியவை விரிவுபடுத்தப்பட்ட 3-ஆம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவின் செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.


÷ஒரு அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து பிற மருத்துவக் கல்லூரிக்கு மாற விரும்பும் மாணவர்களுக்கான மறு ஒதுக்கீடும் இந்தக் கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு அட்டவணை சுகாதாரத் துறையின் இணையதளத்தில் 
வெள்ளிக்கிழமை வளியிடப்பட்டுள்ளது.

No comments: