Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 23 April 2015

பகுதிநேர பொறியியல் படிப்பு: விண்ணப்பம் குறித்த விவரம்

தமிழகத்தில் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2015-16 ஆம் கல்வியாண்டிற்கு பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
1. அரசினர் பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் 641 013
2. அரசினர் பொறியியற் கல்லூரி, சேலம் 636 011
3. அரசினர் பொறியியற் கல்லூரி, திருநெல்வேலி 627 007
4. அழகப்ப செட்டியார் பொறியியற் கல்லூரி, காரைக்குடி 630004 
5. தந்தை பெரியார் அரசினர் பொறியியற் கல்லூரி, வேலூர் 632 002
6. அரசினர் பொறியியற் கல்லூரி, பர்கூர் 635 104
7. பி.எஸ்.ஜி. பொறியியற் கல்லூரி, கோயம்புத்தூர் 641 004
8. கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் 641 014
9. தியாகராஜர் பொறியியற் கல்லூரி, மதுரை 625 015

தகுதி
i. விண்ணப்பதாரர், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவடைய வேண்டும்.
ii. விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும் சமயம் பணிபுரிபவராக இருத்தல் வேண்டும்.
iii. விண்ணப்பதாரர், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பதிவு பெற்ற நிறுவனம் / கம்பெனி / தொழிற்சசாலை / கல்வி நிறுவனம் / அரசு / தன்னாட்சி பெற்ற நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
பணிபுரியும் இடம்
விண்ணப்பதாரர் பணிபுரியும் இடம் விண்ணப்பிக்கும் கல்லூரியிலிருந்து 120 கி.மீ. தொலைவிற்குள்ளாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பம் செய்வதற்கு www.ptbe-tnea.com என்ற இணையதள முகவரியை பார்வையிடவும்.
இந்த இணையதள வழியாக இரு வகைகளில் விண்ணப்பிப்பதற்கு வழிமுறைகள் உள்ளன       
1. offline mode – விண்ணப்பத்தினை பதவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்பும் முறை.
2. online mode – இணையதள வழியாக நேரிடையாக விவரங்களை பதிவு செய்து அதனை பிரதி எடுத்து உரிய ஆவணங்களுடன் அனுப்பும் முறை. 
offline mode-ல் விண்ணப்பிப்பவர்கள் தேவைப்பட்டால் மேற்குறிப்பிட்ட கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் விண்ணப்பத்தினை ரூ.50/- செலுத்தி பதவிறக்க நகலை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவம் கிடைக்கும் நாள்
விண்ணப்பப் படிவம் (offline/online) www.ptbe-tnea.com இணையதள முகவரியில்  28.4.2015 முதல் 8.5.2015 மாலை 4.00 மணி வரை பயன்பாட்டில் இருக்கும்.
பதிவுக் கட்டணம் விண்ணப்பதாரர் ரூ.300/- (ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.150/-)க்கான கேட்வு வரைவோலையினை (27.4.2015-க்கு முன்னர் பெற்றிருக்கக் கூடாது.) “The Secretary, Part time B.E. / B.Tech. Admissions, Coimbatore” என்ற பெயரில் பெற்று பதிவுக் கட்டணமாக விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.   பதிவுக் கட்டணத்திற்கான கேட்பு வரைவோலையின்றி பெறப்படும் விண்ணப்பங்கள் காரணமின்றி நிராகரிக்கப்படும்.
6) பொது மேலும் விவரங்கள் அறிய  www.ptbe-tnea.com இணையதள முகவரியில்  INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES”பக்கத்தில் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பதிவுக் கட்டணத்துடன் கீழ்க்காணும் முகவரிக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள்:8.5.2015, மாலை 5.00 மணி.

No comments: