Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 6 April 2015

கடந்த 1986-87 ஆண்டு வரையிலான ஆசிரியர் பட்டயச் சான்று பிளஸ் 2-க்கு இணையானது

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, கடந்த 1987 ஆம் ஆண்டுக்குப் முன்பாகப் பெறப்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பட்டயச் சான்றானது, பிளஸ் 2 வகுப்புக்கு இணையானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அண்மையில் வெளியிடப்பட்ட உத்தரவு:

கடந்த 1987-88 ஆம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி பிளஸ் 2 என நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முன்பு, 1986-87 ஆண்டு வரையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர்ந்து பயில அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இறுதியாக, 1986-87 ஆம் ஆண்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் முதல் ஆண்டில் சேர்ந்தவர்கள், 1987-88-ல் பயிற்சியை முடித்து தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றனர். அதில், ஒரு சில பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள், 1988-ஆம் ஆண்டுக்குப் பிறகே தோல்வியுற்ற பாடங்களில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றனர். அதுபோன்றே 1986-87 ஆம் ஆண்டுக்கு முந்தைய கல்வி ஆண்டுகளில் இடைநிலை
ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து பயின்று தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களும், பின்னர் வந்த ஆண்டுகளில், தோல்வியுற்ற பாடங்களில் தேர்வு எழுதித் தேர்ச்சி அடைந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, அத்தகையோர் பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர் பயிற்சிச் சான்றுகளையும், பிளஸ் 2 தேர்ச்சிக்கு இணையாகக் கருதப்பட வேண்டிய நிலை உள்ளது.
இந்தக் கருத்தை செயலாக்கத்துக்குக் கொண்டு வர ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அந்தத் திருத்தம் இப்போது கொண்டு வரப்பட்டுள்ளது.
திருத்தம் என்ன? பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை (கடைசி பிரிவினர்) ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அந்தப் பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்களும், அந்தப் பயிற்சியில் சில பாடங்களில் தோல்வியுற்று
பிறகு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சலுகை அளிக்கப்படுகிறது. அதன்படி, அவர்கள் பெற்ற இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்றினை பிளஸ் 2 வகுப்புக்கு இணையாகக் கருதி உத்தரவு வெளியிடப்படுகிறது என அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: