Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday 13 November 2014

TRB: ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்: 6 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 6 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 67 பேர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசின் இரண்டு அரசாணைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்த அனைத்து தேர்வாளர்களுக்கும் அரசு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மனுதாரர்கள், வெயிட்டேஜ் மதிப்பெண்களால் பலரும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு சாதகமாகவும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மனுதாரர்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் 6 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே வருங்காலத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

No comments: