Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 20 October 2014

210 அரசு மேல்நிலைப் பள்ளிகளை மேம்படுத்த ரூ. 248 கோடி ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும், 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல் வகுப்பறை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அனுமதி கோரியிருந்தார்.
அதை ஏற்று 1,335 கூடுதல் வகுப்பறைகள், 184 ஆய்வகங்கள், மாணவர்களுக்கு, 270 கழிப்பறைகள், மாணவியருக்கு, 333 கழிப்பறைகள் மற்றும், 50 ஆயிரத்து 110 மீட்டருக்கு சுற்றுச்சுவர் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இத்தகைய வசதிகள் நடப்பு கல்வி ஆண்டிற்குள், 248 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.
இதில், ’நபார்டு’ வங்கி நிதியுதவி மூலம் 149.34 கோடி ரூபாயும், தமிழக அரசு 98.40 கோடி ரூபாயும் வழங்கும். இவ்வாறு செயலர் கூறியுள்ளார்.

No comments: