ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். ஆண்டு முழுவதும் கற்றுக்கொள்வதற்கு எழுத்தறிவு அடிப்படை. இது சமூகத்தில் அமைதி, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்பட உதவுகிறது. உலகில் இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செப்., 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. "எழுத்தறிவு மற்றும் நிலையான வளர்ச்சி&' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
2011ன் படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது. இதில் ஆண்கள் 82.14 சதவீதம், பெண்கள் 65.46 சதவீதம். இது 2001 கணக்கெடுப்பை விட 9.2 சதவீதம் அதிகம். தமிழக எழுத்தறிவு சதவீதம், 80.33 சதவீதமாக உள்ளது. இது 2001ஐ விட 6.9 சதவீதம் அதிகம். 100 சதவீத எழுத்தறிவு என்பதை நோக்கி முன்னேற வேண்டியது காலத்தின் கட்டாயம்.
எழுத்தறிவு சதவீதத்தில் நாட்டிலேயே முதலிடத்தில் திரிபுரா உள்ளது. இப்பட்டியலில் தமிழகம் (80.33) 14வது இடத்தில் உள்ளது. பீகார் (63.82) கடைசி இடத்தில் உள்ளது.
மாநிலம்சதவீதம்
1. திரிபுரா94.65
2. கேரளா93.91
3. லட்சத்தீவு92.28
4. மிசோரம்91.58
5. கோவா87.40
No comments:
Post a Comment