Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, 9 August 2014

UGC-NET: தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு தேசிய தகுதித் தேர்வு பயிற்சி

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படும் தேசியத் தகுதி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வேலூர் ஆக்ஸிலியம் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தின் செய்திக் குறிப்பு:
டிசம்பர் 2014-ல் நடைபெறும் சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேசியத் தகுதி தேர்வுக்கான இப்பயிற்சி வகுப்புகள் 23-ம் தேதி தொடங்குகின்றன. ஆங்கிலம், வணிகவியல், கணிதம், ரசாயனம் மற்றும் உயிரி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் நடைபெறும் இப்பயிற்சி வகுப்புகளில் சேர ரூ.500 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
இப்பதிவு 20-ம் தேதி செய்ய வேண்டும். எஸ்சி., எஸ்டி மாணவ, மாணவியர் முதுகலையில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற வகுப்பினர் முதுகலையில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முதுகலை இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு 0416-2241744 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

No comments: